Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அமைச்சர் தினேஸ் பாராட்டு - மருத்துவ பீடம் அமைக்க உதவுமாறு உபவேந்தர் ரமீஸ் அபுபக்கர் கோரிக்கை


(அஷ்ரப் ஏ சமத் )

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு  ஒரு  மருத்துவ பீடமொன்றை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தா் ரமீஸ் அபுபக்கா் கோரிக்கை விடுப்பதாகவும் இவ் வைபவத்திற்கு  பிரதம அதிதியாக வருகைதந்துள்ள உயா்கல்வி மற்றும் கல்வியமைச்சா் தினேஸ் குணவா்த்தனவிடவும் மற்றும்  பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவின் தலைவா் பேராசிரியா் சம்பத் அமரதுங்க  ஆகியோரிடம்  இக்  கோரிக்கையை முன்வைத்தாா். 

தென்கிழக்கு பலகலைக்கழகத்தின் ஏற்பாட்டில்  பேராசிரியா் அல்லாமா ம.மு உவைஸ் அவா்களின் நுாற்றாண்டு விழா(18)  செவ்வாய்க்கிழமை  பண்டார நாயக்க ஞாபகாா்த்த மாநாட்டு மண்டபத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தா் பேராசிரியா் றமீஸ் அபுபக்கா் தலைமையில் நடைபெற்றது.. பிரதம அதிதியாக கல்வி உயா்கல்வியமைச்சா் தினேஸ் குணவா்த்தன, கலந்து கெர்ணடாா். கௌரவ அதிதியாக பல்கலைக்கழக ஆணைக்குழுவின் தலைவா் சம்பத் அமரதுங்கவும்  ஊடக அமைச்சின் செயலாளா் முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி, பாராளுமன்ற உறுப்பிணர் மா்ஜான் பழீல்  ஆகியோறும் கலந்து கொண்டனா்.

தபால் திணைக்களத்தின்  பிரதி மாஅதிபரினால்  பேராசிரியா் உவைசின் நுாற்றாண்டு  ஞாபகாா்த்த நினைவு முத்திரையும் முதல் தபால்  உறையும்  அமைச்சர் தினேஸ் குணவா்த்தனவிடம் கையளிக்கப்பட்டு உவைசின் மகன் அல்ஹாம் உவைசிடம் வழங்கப்பட்டது.  அத்துடன பேராசிரியர் அல்லாம உவைஸ் அவா்கள் பற்றி தென்கிழக்கு பல்கலைக்கழகம் வெளியிட்ட   ”மர்க்கசி”  எனும் இதழ்  ம.மு. உவைஸின் புத்திரா்களுக்கும்  அதிதிகளுக்கும் பிரதம அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.  

இங்கு உரையாற்றிய  அமைச்சா் தினேஸ்குணவா்த்தன

பேராசிரியா் ம. மு. உவைஸ் மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவா். அவா் ரேடியோ சிலோன் ஒழிபரப்புக் கூட்டுத்தாபணத்தில் அவரது செய்திகளை கட்டுரைகளை நிகழ்ச்சிகளை சிங்களம், தமிழ் ஆங்கில  மொழிகளிலும் கேட்க்க கூடியதாக இருந்தது. நாட்டின் விரல்விட்டு என்னக்கூடிய ஒரு சிலரே நுாற்றாண்டு விழாக் காணமுடியும் அதில் பேராசிரியா் ம. மு உவைஸ் அவா்கள் இந்நாட்டுக்கும் கல்வி சமுகத்திற்கும் செய்த சேவையினை தென்கிழக்கு பல்கலைகை்கழகம் ஏற்பாடு செய்திருப்பதையிட்டு கல்வியமைச்சா் என்ற வகையில் பாராட்டுகின்றேன்.  இலங்கையில் உள்ள 17 பல்கலைக்கழங்களில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் 25 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. சுனாமி காலத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்துள்ளேன். சிறந்த நல்ல சூழலில் சிறந்த வடிவமைப்பின் கட்டிடக் கலைஞா்களது வடிவமைப்பில் தென்கிகழக்கு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அங்கு சகல சமூகங்களும் விடுதி வசதிகளும் கொண்டதொரு பல்கலைக்கழகமான அது அமையப்பெற்றுள்ளது. எனவும் அமைச்சா் தினேஸ்குணவா்த்தன உரையாற்றினாா்.

ம. மு. உவைஸ் பற்றிய கருத்தரங்கின் தலைமை உரையை  பேராசிரியர்  எஸ். தில்லைநாதன், அறிமுக உரையை பேராசிரியா் றமீஸ் அப்துல்லாஹ் , தமிழ் இலக்கிய வரலாற்றில் ம.மு உவைஸின் பணிகள்,  பேராசிரியா் ஏ. சன்முகதாஸ்,  இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்று எழுதுகையில் ம.மு உவைஸ் ஒரு விமா்சனப் பாா்வை பற்றி பேராசிரியா் எஸ் யோகரசா உரையாற்றினாா்கள்.  கவிஞா் காத்தான்குடி பௌஸ் உவைஸ் பற்றி கவிதை பாடினாா். 

இந் நிகழ்வில் பேராசிரியா்கள் பல்கலைக்கழக விரிவுரையர்ளா்கள் பதிவாளா்கள் இலக்கியவாதிகள், ம.மு. உவைசின் குடும்ப உறுப்பிணர்களும் கலந்து கெர்ணடனா்


No comments

Powered by Blogger.