Header Ads



எதிர்காலத்தில் நாம் எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ள மாட்டோம் - பொருளாதாரம் சரியான பாதையில் செல்கிறது


இலங்கையின் பொருளாதாரம் ஏற்கனவே சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், சில மாதங்களுக்கு முன்னர் இருந்த பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில் நாடு செழுமையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதாரத்திற்கு ஆசிர்வாதம் வழங்கும் விசேட நிகழ்வு கண்டி மல்வத்தை விகாரையில் நேற்று  (15) இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நாங்கள் எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ள மாட்டோம் எனவும் மேலும் 500 மில்லியன் டொலர் கடனையும் செலுத்த முடியும் என்று குறிப்பிட்டார்.

இராஜதந்திர உறவுகள் பேணப்பட வேண்டும் எனவும் வாக்குறுதியளிக்கப்பட்ட திகதியில் கடன்கள் திருப்பிச் செலுத்தப்படும் என்றும் கூறினார்.

மேலும், இதுவரை 12,400 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைத் திருப்பிச் செலுத்தியுள்ளதாகவும், இன்னும் 3,100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கைவசம் இருப்பதாகவும் கப்ரால் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. This crisis will continue untill the people sleep. They will wake up and stone the ministers. Peoples voice should rise above politicians voice.

    ReplyDelete

Powered by Blogger.