நாட்டின் தலைவராக ரணிலை, தெரிவு செய்ய வேண்டும் - ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
நாட்டின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்ய வேண்டும் என்ற யோசனை கரந்தெனிய ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகார சபைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தலைமையில் இந்த அதிகார சபைக் கூட்டம இன்று நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கரந்தெனிய அதிகார சபையின் தலைவர் நுவன் சோமரத்ன இந்த யோசனையை கொண்டு வந்ததுடன் அதிகார சபையின் குழு செயலாளர் மங்கள குமார அதனை ஆமோதித்தார்.
இந்த யோசனை அதிகார சபைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட போது, அனைவரும் அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதுடன் யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நாட்டின் பொதுமக்கள் தேர்தலில் வாக்களக்காது தோல்வியடையச் செய்த ரணில் பஞ்சத்தில் போனஸ் பதவியில் பல மாதங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் இறுதியில் பாராளுமன்றம் சென்று ஒரு சதத்துக்கும் பிரயோசனமும் இல்லாத அதாவது வக்கில்லாத கூட்டத்தை தன்னகத்தே வைத்திருக்கும் இவருக்கு நாட்டின் தலைமைப் பதவி கொடுக்கப்பட வேண்டும் என தீர்மானித்த அனைவரையும் உடனடியாக அங்கொட வைத்தியசாலையில் குறைந்தது 6மாதமாவது நிறுத்தி வைத்தியம் செய்ய வேண்டும். அதுவும் சரியன பைத்தியம் குணமாகும் என எதிர்வு கூறமுடியாது.
ReplyDeleteNow Country slowly slowly going down. Moosalaya/Moose Ranil Will quickly take the country in to hell.
ReplyDelete