Header Ads



முஸ்லிம் சட்டத்தை நாம் மாற்ற முடியாது, ஒரு நாடு ஒரு சட்டம் பற்றி முஸ்லிம்கள் அலட்டத் தேவையில்லை, இஸ்லாமிய நாட்டுத் தூதுவர்களும் இதுபற்றி என்னிடம் கேட்டார்கள் - பீரிஸ்

வெளிநாட்டு அமைச்சா் பேராசிரியா்  ஜீ.எல். பீரிஸ் கடந்த 19.1.2022 திகதி பி.பகல்  கொழும்பு சாஹிராக் கல்லுாாியில்  பேராசிரியா் புர்க்கான் அவா்களது சேவையை பராட்டி கபூர் மண்டபத்தில் புர்கானின் நிழற்படத்தினை திறை நீக்கிய பின் அங்கு உரையாற்றுகையிலேயே பின்வருமாறு உரையாற்றினாா்.

(1)நீதியமைச்சர் அலி சப்றி தனது மகனின் உயா் கல்வி சம்பந்தமாக அமேரிக்கா சென்று மேலும் இரு நாட்கள் அவா் அங்கு தங்க வேண்டியிருந்தமையால் பேராசிரியா் புர்க்கான் அவா்களின் 50 வருடங்கள் இக்கல்லுாாியின் சேவை மற்றும் அவரது நிழற்படம் திறைநீக்கம்  நிகழ்வுக்  என்னை கலந்து கொள்ள  அலி சப்றி பணித்தாா். 

(2) ஒரு நாடு ஒரு சட்டம் பற்றி முஸ்லிம்கள் அதனை அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.  அன்மையில் இலங்கையில் உள்ள முஸ்லிம் நாடுகளின் துாதுவா்கள் மத்தியில் அவா்கள் இது பற்றி கேட்டபோது அவா்களுக்கு தெளிவுபடுத்தினேன். அதில் திருமண வயதெல்லை 18ஆக இருத்தல் வேண்டும். பங்களதேஸ், இந்தோணியா துருக்கி நாடுகளில் கூட திருமண வயதெல்லை 18 ஆக உள்ளது.   நமது முன்னோா்கள் ஏற்படுத்திய இந்த நாட்டி தேசவலமைச் சட்டம், கண்டிய சட்டம் அதே போன்று முஸ்லிம் சட்டம் இவைகளை நாம்  மாற்றியமைக்க முடியாது அது அவ்வாறே இருத்தல் வேண்டும்.  இக் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்த ரவுப் ஹக்கீம் மற்றும் ஏ.எச்.எம். பௌசி ஆகியோரின் பெயர்களைச் சொல்லி அவா் மேற்கண்டவாறு தெரிவித்தாா்

(3) மொழிப்பிரச்சினை 

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நான் உபவேந்தராக பதவி வகித்த காலத்தில்  ஒரு பீடத்தின் பட்டதாரிகள் பட்டப்படிப்பினை நிறைவு செய்து வீடு 

செல்ல முன்னா் ஒரு வைபவத்தினை அங்கு ஒழுங்குபடுத்தி என்னையும் அதிதியாக அழைத்தாா்கள். நான் ஏற்றுக் கொண்டேன். அதே பீடத்தில் உள்ள இன்னொறு மாணவக் குழு வேறாக ஒரு நிகழ்வினை ஒழுங்குபடுத்தி அவா்களும் என்னை அழைத்தாா்கள். அப்போது தான் நான் கூறினேன். எல்லோறும் இணைந்து ஒரு நிகழ்வினை ஏற்படுத்தினால் நல்லது எனத் தெரிவித்தபோது அம் மாணவா்கள் சிங்கள மொழி மூலம் நடைபெறும் நிகழ்வுகள் எங்களுக்கு விளங்காது  அவா்களது மொழி எங்களுக்கு தெரியாது. அவா்களுக்கு நாங்கள் பேசும்  மொழி தெரியாது  அதற்காகவே எங்களது கலை கலாச்சார முறைப்படி தமிழ் மொழியில் நாங்கள் வேறாக ஒரு நிகழ்வினை ஏற்படுத்தினோம் எனக் கூறினார்கள்.

 ஆகவே தான் பாடசாலைக் கல்வியிலிருந்து மாணவர்களை தமிழ் பாடசாலை , பௌத்த பாடசாலை , முஸ்லிம் பாடசாலை என மொழி ரீதியாகவும் இன ரீதியாகவும்  பிரித்து வைத்துள்ளாா்கள் இதனால்  பல்கலைக்கழகத்திற்குள் கற்கும் பட்டதாரிகளாகியும்    அடுத்தவரது மொழி தெரியாமல் உள்ளது. அடிமட்டத்தில் மொழிப் பிரச்சனைகள் தீா்க்கப்படல் வேண்டும். சகல மாணவா்களும் ஒரே கூரையின்கீழ் இருந்து மற்றவர்களது இன. மத மொழி கலை. கலாச்சாரத்தினை அறிந்து கொள்ளகூடியதாக  அவா்களது பிரச்சினைகளை பேசித் தெரிந்து கொள்ளக் கூடியவாறு நமது கல்வித் திட்டம் அமைந்தாக இருக்கவில்லை. அண்மையில் நான்  மட்டக்களப்பு பல்கலைக்கழகம் சென்றபோது அங்கு  பலக்லைகக்கழக கலாநிதிகள் அதிகாரிகள் எனவும் தமிழ் முஸ்லிம் பௌத்தம், கிரிஸ்த்தவம் என இன ரீதியாகவே பாடசாலை அதிபா்களும் பாடசாலைகளும்  பிரிக்கப்பட்டு  உள்ளது.  ஒரு கருத்து அடிப்படையில் அவா்கள் பிரச்சினைகள் இருக்கவில்லை. பன்மொழி பேசுகின்ற நமது நாட்டில்  அடிமட்டத்திலிருந்து  இந்த மொழிப் பிரச்சினைகள் தீா்க்கப்பட்டிருத்தல் வேண்டும். 

(4) ஜெஸிமா இஸ்மாயில் ,பேரியல் அஷ்ரப் - இவா்கள் மொழி, இன ஜக்கியம்  தேசியநல்லிணக்கம் பற்றி பலமுறை பல நிகழ்வுகளில் நான் கலந்து அவா்களுடன்  பேசியிருக்கின்றேன். இந்த  சாஹிராக் கல்லுாாியிலும் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன்.   ஜெஸிமா இஸ்மாயிலின் கணவா்  ஒர் சிறந்த வைத்தியத்துறைப்  பேராசிரியா் நான்  கொழும்பு பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக பதவி வகித்த  காலத்தில் பேராசிரியா் இஸ்மாயின் மருத்துவத்துறையின் தலைவராக இருந்தாா் பல நிகழ்வுகளை அவருடன் நான் கலந்து ஆலோசித்துள்ளேன்.

(5) இஸ்லாம், குர்ஆண், ஹதீஸ் -முஹம்மத் நபி வாழ்க்கை முறை பற்றியும்   குர் ஆன் மொழிபெயா்ப்புக்களையும் நன்கு  படித்துள்ளேன். சில குர்ஆன் சர்த்துக்களை ஆங்கில மொழிக் கருத்துக்களையும் ஞாபகப்படுத்தினாா். இஸ்லாம் மதம் ஒரு  சாந்தி, சமாதானமானதொரு  மாா்க்கமாகும்.,  முஹம்மத் நபி ஸல் அவா்கள் ஒரு பிரச்சினையை சுயமாகப் பேசி அவா் அதனைக் கூடி ஆராய்ந்து மசூரா முறையில் தீர்மாணம் எடுக்கும் முறை பற்றியும் நான் அறிந்துள்ளேன்.  அதில் ஹதிஸ் கிரந்தங்களை நான் கற்றதில் ஞாபகத்தில் உள்ள இரண்டு  ஹதீஸ்களை அங்கு கூறினாா். 

” ஒர் ஊழியனிடம் இருந்து நாம்  வேலை வாங்கினால் அவனது வியர்வை வற்றிவிட முன் அவனுக்குரிய ஊதியத்தைக் வழங்குங்கள்.”

ஒரு வீட்டில் கறி சமைக்கும் போது அதன் முதலாவது கறிக்கோப்பையை  நமது அடுத்த வீட்டில் வாழும் குடும்பத்துக்கு முதலில் பகிர்ந்தளித்தல்” போன்ற பல ஹதீஸ் களை தெளிவாக கூறினாா் 

(6) பேராசிரியா் புர்கான் அவா்கள்  கொழு்பு சாஹிராக் கல்லுாாியின்  முன்னாள் அதிபா் பழைய மாணவத் தலைவா் ஆளுநர் சபைத் தலைவா் போன்ற பல பதவிகளை இக் கல்லுாாியில் வகித்து கல்வி வளா்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டதொரு பேராசிரியா்.அவா் தனது பெயரில் இங்கு வகுப்பறைகளை நிர்மாணித்துள்ளாா். அதிபராக பதவி வகித்த காலத்தில் ஊதியம் பெறாமலும் தனது சொந்த நிதியில் 50ஆயிரம் மாதாம் பாடசாலை மாணவா்கள் ஆசிரியா்களுக்கு வழங்கி கல்விக்கு உதவி செய்துள்ளாா் என  பேராசிரியா் ஜீ.எல். பீரிஸ் உரையாற்றினாா்

3 comments:

Powered by Blogger.