Header Ads



அசைக்க முடியாத இரும்புக் கொள்கை திட்டத்தை தயாரித்துள்ளேன், இதுவே இலங்கையை மீட்டெடுக்க ஒரே வழி


நாளுக்கு நாள் நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்து வரும் நிலையில், நிலையான இரும்புக் கொள்கை திட்டம் ஒன்று தேவை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புத்தளம் பெத்தானி 101 பங்களாவில் சமூக மாற்றத்தை உருவாக்கும் குழுவுடனான கலந்துரையாடலில் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், புத்தளம் 'பெத்தானி பங்களா' இதற்கு முன்னர் எஸ் .சி. டபிள்யூ.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா ஆட்சியை பிடிக்கும் முதல் உள்ளகக் கலந்துரையாடலை நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும்.

அசைக்க முடியாத இரும்புக் கொள்கை திட்டத்தை தான் தயாரித்துள்ளதாகவும் இதுவே இலங்கையை மீட்டெடுக்க ஒரே வழி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை நடைமுறைப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், மக்கள் கைகளிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்திற்கான நடவடிக்கைக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

குறிப்பாக டொலர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதற்கு பதிலாக நெருக்கடிக்கு மாற்று ஏதும் இருந்தால் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டும் என ரணில் அண்மையில் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

"நல்லாட்சியின் போது இலங்கையும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றோம்.. கடினமான காலங்களில் அந்த நிதியத்திற்கு சென்றோம் ஆனால் அது நாட்டுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

சர்வதேச நாணய நிதியம் ஒரு நாட்டின் நிதி ஒழுக்கத்தையும் ஜனநாயகத்தையும் எதிர்பார்க்கின்றது" என்று அவர் தெரிவித்துள்ளார். TW

5 comments:

  1. உமது இரும்புக் கொள்கையின் பிரதிபலன்தான் இன்றைய அராஜகம். இனி மற்றொரு அராஜகத்துக்கு வழிவகுக்காமல் உமது கள்ள நண்பன் சிங்கப்பூர் பிரஜை அர்ஜூன் மகேந்திரனை சிங்கப்பூரில் இருந்து கொண்டுவந்து மத்தியவங்கியில் இருந்து களவாடிய பணத்தை திருப்பி திறைசேரிக்கு ஒப்படைக்க ஒரு இரும்புக் கொள்கையை வகுத்து உடனடியாகச் செயல்படுத்திவிட்டு செய்த குற்றத்துக்காக நீர் சிறை சென்றால் அதுதான் உண்மையான இரும்புக் கொள்கை, அதைவிட்டு மக்களை ஏமாற்ற பசப்பாமல் உமது வேலையைப்பாரும்.

    ReplyDelete
  2. உமது இரும்புக் கொள்கையின் பிரதிபலன்தான் இன்றைய அராஜகம். இனி மற்றொரு அராஜகத்துக்கு வழிவகுக்காமல் உமது கள்ள நண்பன் சிங்கப்பூர் பிரஜை அர்ஜூன் மகேந்திரனை சிங்கப்பூரில் இருந்து கொண்டுவந்து மத்தியவங்கியில் இருந்து களவாடிய பணத்தை திருப்பி திறைசேரிக்கு ஒப்படைக்க ஒரு இரும்புக் கொள்கையை வகுத்து உடனடியாகச் செயல்படுத்திவிட்டு செய்த குற்றத்துக்காக நீர் சிறை சென்றால் அதுதான் உண்மையான இரும்புக் கொள்கை, அதைவிட்டு மக்களை ஏமாற்ற பசப்பாமல் உமது வேலையைப்பாரும்.

    ReplyDelete
  3. "அசைக்க முடியாத இரும்புக் கொள்கை திட்டத்தை தான் தயாரித்துள்ளதாகவும் இதுவே இலங்கையை மீட்டெடுக்க ஒரே வழி".


    ONLY NOW, you have been able to prepare this "இரும்புக் கொள்கை"?

    What happened to you ALL these years of your political life? You have to come to the END of your Political life to find this Mysterious "இரும்புக் கொள்கை"!!!!!!

    Whom are you trying to Fool Ole Fella?

    ReplyDelete
  4. சீமெந்தி தட்டுப்பாடாமே

    ReplyDelete
  5. first you think about to rebuild your party, then think about the country

    ReplyDelete

Powered by Blogger.