Header Ads



விராட் கோலிக்காக அனுஷ்காவின் உணர்ச்சிப்பூர்வமான பதிவு:


விராட் கோலிக்காக அவரது மனைவி அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிப்பூர்வமான பதிவை எழுதியுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக விராட் கோலி சனிக்கிழமை அறிவித்தார்.

2014ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை கோலி முதல் முறையாக வழி நடத்தினார். அந்த நாளை அனுஷ்கா தனது பதிவில் நினைவுகூர்ந்துள்ளார்.

"தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்ததால் நீங்கள் கேப்டனாகப்பட்டீர்கள் என்று 2014 இல் நீங்கள் என்னிடம் சொன்ன நாள் எனக்கு நினைவிருக்கிறது."

விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலக பட்டியலிட்ட காரணங்கள் - கவலையில் ரசிகர்கள்

2021ல் இந்திய கிரிக்கெட் - இந்தியாவின் கப்பா வெற்றி முதல் விராட் கோலியின் கேப்டன் பதவி வரை

"தோனியுடன் நீங்களும் நானும் சேர்ந்து கேலியாகப் பேசிக் கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. விரைவில் தாடி நரைக்கத் தொடங்கும் என்று தோனி கேலியாகச் சொன்னார். அன்று நாம் எல்லோரும் நிறையச் சிரித்தோம். அன்று முதல் உங்கள் தாடி நரைப்பதையும் தாண்டி பலவற்றைக் கண்டேன்" என்று அனுஷ்கா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மைதானத்துக்குக்கு வெளியேயும் சவால்கள்

கடந்த 7 ஆண்டுகளில் மைதானத்துக்கு உள்ளேயும் வெளியேயும் விராத் கோலி சவால்களை எதிர்கொண்டதாக அனுஷ்கா கூறியுள்ளார்.

"எனது அன்பே உனது சாதனைகளுக்காக நான் பெருமைப்படுகிறேன். ஆனால், உனக்குள்ளேயே நீ பெற்றவற்றுக்காகவே அதிகம் பெருமை கொள்கிறேன்"

தோல்வியடைந்ததால் கண்ணீருடன் கோலி அமர்ந்திருந்ததைப் பார்த்திருப்பதாகவும், ஆனால் அவர் ஒரு போதும் துணிச்சலை இழந்ததில்லை என்றும் அனுஷ்கா தனது பதிவில் கூறியுள்ளார்.

"நீங்கள் மற்றவர்களைப் போன்றவர் அல்லர். பாசாங்குதான் உங்களது முதல் எதிரி. அதனாலேயே உங்களைப் பார்த்து வியப்போரின் கண்களுக்கு நீங்கள் மாவீரராகத் தெரிகிறீர்கள். உங்களை அனைவராலும் புரிந்து கொள்ள இயலாது." என்று அனுஷ்கா கூறியுள்ளார்.

2017-ஆம் ஆண்டு அனுஷ்காவை விராட் கோலி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

சனிக்கிழமையன்று தனது ராஜிநாமா முடிவை அறிவித்த விராட் கோலி, "அணியை சரியான திசையில் கொண்டு செல்ல ஏழு வருட கடின உழைப்பை செலுத்தி, இடைவிடாத விடாமுயற்சியுடன் தினமும் போராடினேன். இப்போது பதவியில் இருந்து ஒதுங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது," என்று கூறியிருந்தார்.

No comments

Powered by Blogger.