Header Ads



மாயை, அறியாமை, ஏமாற்று, வஞ்சகம் ஆகியவற்றால் நாம் இனி ஒருபோதும் ஏமாந்து விடக்கூடாது - சஜித்


மாயை,அறியாமை,ஏமாற்று,வஞ்சகம் ஆகியவற்றால் நாம் இனி ஒருபோதும் ஏமாந்து விடக்கூடாது என்றும்,இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து உண்மையான யதார்த்தவாத பயணத்திற்கு அணி திரள வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார். 

ஐக்கிய ஒருங்கமைப்பு படையணியின் பதுளை மாவட்ட செயற்குழு அங்குணார்ப்பண கூட்டம் இன்று (17) பதுளை நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமை தாங்கினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி மற்றும் ஹேஷா விதானகே ஆகியோர் இணைந்து ஐக்கிய ஒருங்கமைப்பு படையணியை  உருவாக்கியுள்ளனர் என்பதோடு,இது முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்ப்பாட்டு ரீதியான துனை அலகுகளில் ஒன்றாகும்.

கடந்த கொரோனாவின் தொடக்கத்தில்,அரச அதிகாரம் இல்லாவிட்டாலும் கூட ஐக்கிய மக்கள் சக்தி மக்களுக்கான தனது பொறுப்பை நிறைவேற்ற பாடுபட்டது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், “ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு”,சத்கராய,பிரபஞ்சம் போன்ற நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம் இந்த நாட்டிற்கு பெறுமதி சேர்க்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என்றும் தெரிவித்தார்.

அதிகாரத்தில் இருப்பவர்களோ அல்லது அதிகாரத்தை பெற கனவு காண்பவர்களோ அப்படிப்பட்ட சேவை சார்ந்த வகிபாகத்தை ஆற்றியிருக்கிறார்களா என மனசாட்சியுடன் வினவிப்பார்க்கட்டும் என தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர், நாட்டிற்காக சேவையாற்றவே தான் அதிகாரத்தைக் கோருவதாகவும்,அதிகாரத்தைக் கைப்பற்றும் முன் தன்னால் முடிந்தவரை சேவைகளை மேற்கொண்டு அது முன்னுதாரணமாக கான்பித்துள்ளதாகவும் என்றும் தெரிவித்தார்.

கொலைகாரர்கள்,கொள்ளையர்கள், போதைவஸ்துகாரர்கள் ,திருடர்கள் ஆகியோரைப் பாதுகாக்க தான் ஒரு போதும் முன் நிற்கமாட்டேன் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,ஐக்கிய மக்கள் சக்திக்குள் இவ்வாறான மோசடிக்காரர்களுக்கு ஒருபோதும் இடமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தம்மைச் சூழவுள்ளவர்களிடமிருந்து பெறப்பட்ட அறிவுரைகளால் இன்று நாடு முழுவதும் பேரழிவு ஏற்பட்டுள்ளது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இந்நாட்டு விவசாயிகள் அந்த துரதிஷ்டமான கதியையே எதிர்நோக்கியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.