அரசாங்கம் இன்று மக்களிடம் பணம் பறித்து, கப்பம் பெறும் நிலைக்கு வந்துள்ளது - சஜித்
நாட்டிலுள்ள விவசாயிகளை விட வெளிநாட்டில் உள்ள விவசாயிகள் இந்த அரசாங்கத்திற்கு விசேடமானவர்களாகி விட்டனர் எனவும் இன்று அரசாங்கம் மக்களிடம் பணம் பறித்து கப்பம் பெறும் நிலைக்கு வந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவில் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்டு வரும் 'சசுநட அருண' வேலைத்திட்டத்தின் கீழ் திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதிக்குட்பட்ட பேரகம 4 எல விசுத்தாராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட அறநெறிப் பாடசாலை கட்டிடத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) திறந்து வைத்தார்.இந் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இன்று நுகர்வுப் பொருட்களின் விலைகள் தன்னிச்சையாக அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும்,இவை எதற்கும் அரசாங்கம் பொறுப்பல்ல என்பது போல செயற்ப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கும் ஊழல் நிறைந்த அரசாங்கம் எனவும் தெரிவித்தார்.
இந்த சர்வாதிகார ஆட்சியில் ஒட்டுமொத்த விவசாயிகளும் அனாதையாகியுள்ளனர் என்று தெரிவித்த அவர், மக்களை அழிக்கவே இந்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியுள்ளது எனவும் தெரிவித்தார்.
Post a Comment