மின்சாரத்துறையில் மாஃபியா, பில்லியன் கணக்கான பணம் செலவிடப்படுகிறது - மைத்ரிபால
மின்சாரத்துறையில் எழுந்துள்ள பிரச்சினை தற்போது ஏற்பட்டதல்ல என்பதுடன் அது பலவருடங்களாக நிலவும் மாஃபியா என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் தொழிநுட்ப பிரிவுகளில் நீண்ட காலமாக பிரச்சினைகள் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் பிரிவுகள் தனியாக அதிகளவான மின்சாரத்தை பெறுகின்றனர். இதற்காக பில்லியன் கணக்கான பணம் செலவிடப்படுகிறது.
நீண்ட காலமாக இருந்த பிரச்சினைகள் இன்று பாரியளவான முரண்பாடுகளுக்கு வித்திட்டுள்ளன.
எனவே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் உரிய பிரிவுகளுடன் இணைந்து கலந்துரையாடி தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது போன்ற பிரச்சினைகளுக்கும் மின்சாரசபையில் பொதுமக்களின் பணத்தைக் கோடிக்கணக்காக சூறையாடுவதற்கு இடமளித்து அவர்களைப் போசிக்கவும் ஆட்சியில் இருக்கும் போது சகல சலுகைகளையும் வழங்கிவிட்டு இ்ப்போது சுத்தமும், 'நேர்மையைும் கதைக்கும் இந்த மென்டல் மைத்திரியைப் பார்த்து சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.
ReplyDelete