தேசிய பிறை குழு தலைவராக, உஸ்தாத் கலீபதுஷ்ஷாதுலி மௌலவி நியமனம்
- முஸாதிக் முஜீப் -
கொழும்பு பெரிய பள்ளிவாசல் தேசிய பிறை குழு தலைவராக உஸ்தாத் கலீபதுஷ்ஷாதுலி மௌலவி அல்ஹாஜ் ஹிசாம் (பத்தாஹி) நியமனம் செய்யப்படுள்ளார்.
பிறை குழு தலைவராக இருந்த மர்ஹூம் கலீபதுல் குலபா மௌலவி அப்துல் ஹமீத் (பஹ்ஜி) அவர்களின் மறைவை அடுத்து நேற்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற பிறை குழு கூட்டத்தில் இந் நியமனம் செய்யப்பட்து.
கலீபா ஹிசாம் பத்தாஹி மர்ஹூம் கலிபதுல் குலபா அப்துல் ஹமீத் பஹ்ஜியின் மாணவர் என்பது குறிப்பிடத்ததக்கது.
கலீபா ஹிசாம் பத்தாஹி சிரிலங்கா சரீஆ கவுன்ஸிலின் பொதுச் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சுமார் 17 உறுப்பினர்களை கொண்ட கொழும்பு பெரிய பள்ளிவாயல் தேசிய பிறை குழுவில் மர்ஹூம் கலிபதுல் குலபா அப்துல் ஹமீத் பஹ்ஜியின் மறைவின் பின் அன்னாரின் உறுப்பினர் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் கொழும்பு பெரிய பள்ளிவாயாளுடன் தலைப்பிறை விவகாரங்களில் இணைந்து செயலாற்றிய நீர்கொழும்பை சேர்ந்த சகோதரர் முஹம்மது அஹ்ஸன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Post a Comment