Header Ads



டொலர்களை தேடுவது எனது கடமையல்ல - கம்மன்பில


ஜனவரி மாதத்திற்கு டீசல் தேவையில்லை என கூறிய இலங்கை மின்சார சபை, கடந்த 11 ஆம் திகதி எரிபொருளைக் கோரியதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளை இலங்கை மின்சார சபைக்கு வழங்கினால், வாகனங்களுக்கு தேவையான எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்சமயம் மின் உற்பத்திக்காக எரிபொருள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்த அவர், இலங்கை மின்சார சபை டொலர்களை வழங்கினால் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்து வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

நாட்டின் மாதாந்த ஏற்றுமதி வருமானம் 1,000 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தாலும், சில நேரம் 750 மில்லியன் அமெரிக்க டொலர்களையே ஈட்ட முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மின்னுற்பத்திக்கு தேவையான டொலர்களை தேடுவது எனது கடமையல்ல எனவும்,  மின்னுற்பத்திக்குத் தேவையான டொலர்களை பெற்றுக் கொள்வது விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளின் வேலை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


1 comment:

  1. வாயைத்திறந்தால் பொய்,வாக்குறுதியளித்தால் மோசடி, இவனை இந்த நாட்டு மக்கள் பிடித்து சிறையில் ஒப்படைத்து பொதுமக்களிடமும் நம்பிய அவுஸ்ரேலிய வர்த்தகரிடமிருந்து ஏமாற்றி சூறையாடிய பணத்தையும் திருப்பிஎடுத்துவிட்டு சிறையில் நிரந்தரமாக அடைக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.