சந்திரிகாவின் ஆட்சியில் நடந்த, மிக மோசமான சம்பவங்கள் - அம்பலப்படுத்தும் விக்டர் ஐவன்
- விக்டர் ஐவன் -
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் சுயசரிதையை சுய வெளிப்பாடாக வெளியிடுவது அவரைப் பற்றி நூலொன்றை எழுதியிருந்த எனக்கு முக்கியமான செய்தியாக இருந்தது. மேலும், இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதான உரையை முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஆற்றவுள்ளார் என்ற செய்தியும் எனது ஆர்வத்தைத் தூண்டியதற்கு மற்றொரு காரணமாகும். புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை, ஆனால் நூல் வெளியீட்டு விழாவில் அவர் ஆற்றிய உரையைக் கேட்டேன். நாட்டின் பிரதம நீதியரசராக உயர்ந்த பதவியில் இருந்த ஒருவருக்கு இது பொருந்தாத பேச்சு என்று நான் உணர்கிறேன்.
சந்திரிகாவை சிறந்த முன்னுதாரணமாக்குதல்
ஷிராணி பண்டாரநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால், முன்னாள் பிரதமநீதியரசராக இருந்த அவர் அதை உச்சரித்த விதமும், உரையின் சாரமும் அவர் வகித்திருந்த உயர் பதவிக்கு பொருந்துவதாக இல்லை. அவரைப் பொறுத்தவரை, சந்திரிகா உயர்வானவர் ; அவர் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது மட்டுமல்லாமல், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க பல தியாகங்களையும் செய்துள்ளார். ஜனாதிபதி சந்திரிகா குறித்த இந்தக் கூற்று ஒரு சாதாரண கட்சிக்காரரால் அல்ல, முன்னாள் பிரதம நீதியரசர் ஒருவரால் வெளியிடப்பட்டுள்ளது.
இது உருவாக்குகின்ற எண்ணப்பாடு நீதித்துறைக்கும் பயனளிக்கமாட்டாது . சந்திரிகா அவருக்குசிறந்த கதாநாயகி. இலங்கையில் மிகவும் கேவலமான தேர்தல் மோசடி இவரது ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றது. ஆளுங்கட்சியின் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் மதுக்கடை உரிமையாளர்களாக மாறுவதற்கும் அவரது ஆட்சிக் காலத்தில்தான் அனுமதி வழங்கப்பட்டது. அரச நிர்வாகத்தில் கொள்ளை மற்றும் கொள்ளையடிக்கும் தன்மை அவரது ஆட்சியின் போது இடைவிடாத பிரவாகத்தின் தன்மையை எடுத்துக் கொண்டது.
சந்திரிகாவின் பாதுகாப்புக் குழுவின் நம்பிக்கைக்குரிய சக ஊழியரான பெத்தகன சஞ்சீவ, அலரிமாளிகையின் மடியில் வைத்து வளர்க்கப்பட்ட செல்லப்பிள்ளையாகவே கருதப்படுகிறார். அவர் அலரி மாளிகையில் இருந்து பாதாள உலகத்தை ஆட்சி செய்தார். சந்திரிகா அல்லது அவரது நெருங்கிய சகாக் களின் கட்டளையின் பேரில் தனியாட்களை அடக்கி துன்புறுத்தும் திட்டங்களை அவர் செயற் படுத்தினார்.
பழம்பெரும் பாடகர்களான ரூகநாத குணதிலக மற்றும் சந்திர லேகா சம்பவமும் அத்தகைய ஒரு உதாரணம். நடிகை அனோஜா வீரசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்தமை, லசந்த விக்ரமதுங்கவின் வீடு மீதான தாக்குதல் என்பன வேறு இரண்டு உதாரணங்களாகும். சர்ச்சைக்குரிய பத்திரிகையான சட்டன பத்திரிகையின் ஆசிரியர் ரோஹண குமார படுகொலை செய்யப்பட்டமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜன் பொன்னம்பலத்தின் தந்தை குமார் பொன்னம்பலத்தின் படுகொலை தொடர்பில் பெத்தகன சஞ்சீவவின் நிழல் படர்ந்திருந்தது.
குமார் பொன்னம்பலத்தின் படுகொலைக்கு காரணமான மொரட்டுவ சமன், பிரபல குற்றவியல் வழக்கறிஞர் தயா பெரேராவிடம் இதனை வெளிப்படுத்தியிருந்தார். அதன் பின்னரே மொரட்டுவ சமன் கொல்லப்பட்டார். ராஜபக்ச ஆட்சிக் காலத்திலும், முன்னைய ஐ.தே.க ஆட்சிக் காலத்திலும் நடந்த மோசமான சம்பவங்கள் சந்திரிகாவின் ஆட்சியிலும் நடந்துள்ளன என்பதையே இந்தச் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
நீதித்துறையின் சுதந்திரம் பற்றி..
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக சந்திரிகா ஆற்றிய தியாகங்கள் குறித்து அவர் கூறியிருப்பது முன்னாள் பிரதம நீதியரசரின் உரையின் மிகவும் முரண்பாடான பகுதி. நீதித்துறைக்கு சுதந்திரம் என்ற அம்சம் இருந்தால், அதை அழித்தவர் சந்திரிகா. பாராளுமன்றத்தில் ஆறில்ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஜனாதிபதி ஜயவர்தனா நிகழ்த்திய கொடூரமான தாக்குதல்களின் போதும், வேறு எந்த அதிகாரத்திற்கும் முன்னால் வளைந்து கொடுக்காத நீதித்துறையின் முதுகெலும்பை உடைத்தெறிந்தவர் சந்திரிகா.
மிகவும் நம்பிக்கையற்ற சூழ்நிலையில் சிக்கியிருந்த தனது ஊழல் நண்பரை (சட்டமா அதிபர் பதவியை வகித்த சரத் சில்வா) பிரதம நீதியரசர் பதவிக்கு நியமித்து நீதித்துறையின்பிரதிமையை சந்திரிகா சீரழித்தார். அந்தசமயத்தில் , நீதித்துறை அதன் உள் நுழைவாயில்களை பேரழிவு புற்றுநோய் அழுகச்செய்யும் வலி யில் இருந்தது.. அந்த நேரத்தில் நாட்டில் மிகவும் மதிக்கப்படும் சட்டத்தரணிகளில் ஒருவராகக் கருதப்பட்ட எச்.எல். டி சில்வா, இந்த நிலைமையை பின்வருமாறு விப ரித்தார்: “சுதந்திரம் மற்றும் தார்மீக நேர்மையின்மை காரணமாக, முழு நீதித்துறை செயல்முறையும் அர்த்தமற்ற அரங்கின் கோமாளி மட்டத்திற்கு குறையக்கூடும். . எ ம் கண் முன்னே நிழலாடும் பேரழிவை எதிர்கொண்டு எம் உணர்வைத் தீவிரமாக வெளிப்படுத்த முன்வராததற்காகவோ அல்லது குறைந்தபட்சம் அது நிகழாமல் தடுக்க வலுவான நடவடிக்கை எடுக்கக் கோராததற்காகவோ விரும்பத்தகாத ஆபத்தில் கூட எனது விரக்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். .”
நீதித்துறையை ஆட்கொண்ட கொடூரமான புற்றுநோய்க்கு எதிராக நான் மேற்கொண்ட போராட்டத்தின் ஒரு முக்கிய கட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்று வெற்றிச் செய்திகளின் அலைகள் காற்றில் மிதந்து கொண்டிருந்த வேளையில் எச்.எல்.டி சில்வா இதனைத் தெரிவித்தார். நீதி வான் லெனின் ரத்நாயக்க, மாவட்ட நீதிபதி உபாலி அபேரத்ன மற்றும் சட்டமா அதிபர் சரத் சில்வா ஆகிய நீதித்துறையில் மூவருக்கு எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்திருந்தேன்.
முதல் இருவருக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டதன் விளைவாக, இரண்டு நீதிபதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக பிரதம நீதியரசர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்நீதியரசர்கள் அடங்கிய இரண்டு முத்தரப்புக் குழுக்களை நீதிச் சேவை ஆணைக்குழு நியமித்தது. இரண்டு நீதிபதிகளும் குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என இரு குழுக்களும் அறிவித்தன. அதோடு, எனது முதல்கட்ட போராட்டம் முடிவுக்கு வந்தது; சட்டமா அதிபர் சரத் சில்வாவுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்வதோடு யுத்தத்தின் இரண்டாவது அல்லது முதன்மையான கட்டம் ஆரம்பமானது. சட்டமா அதிபருக்கு எதிரான இரண்டு முறைப்பாடுகளையும் (முறையே நானும் இரசாயன பொறியியலாளர் ஜயசேகரவும் தாக்கல் செய்திருந்தோம்) விசாரிக்க தீர்மானித்த உயர் நீதிமன்றம் எனது முறைப்பாட்டின் ஆரம்ப விசாரணையை நடத்தும் பொறுப்பை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவிடம் ஒப்படைத்தது.
ஜயசேகரவின் முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு நீதிபதி அமீர் இஸ்மாயிலுக்கு வழங்கப்பட்டது. இரண்டு வழக்குகளையும் கண்காணிக்க நீதிபதி மார்க் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டார். அப்போது ஜனாதிபதி சந்திரிகாவின் நெருங்கிய விசுவாசிகளில் ஒருவராக இருந்த சரத் சில்வா, இந்த வழக்கில் சிக்கி, பயங்கரமான நிலையில் இருந்தார்.
நீதித்துறை தலைகீழாக மாறியது
, சட்டமா அதிபருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை உயர் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில்பிரதம நீதியரசர் ஜி.பி.எஸ். டி சில்வா, ஓய்வு பெற்றுச் சென்றார். ஷிராணி பண்டாரநாயக்காவின் முன்னுதாரணமான கதாநாயகி , சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவரது நண்பரான பிரபலமற்ற சரத் சில்வாவை அவர் சிக்கியிருந்த வலையில் இருந்து அவரை மீட்டு, உத்தியோகப்ப ற்ற ற் ற முறையில் மற்றும் மறைமுக வழியில் உயர் நீதிமன்றத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் எதிர்பார்ப்புடன்பிரதம நீதியரசராக நியமித்தார் . தனது மூன்று சட்ட ஆலோசகர்கள் (எச்.எல். டி சில்வா, ஆர்.கே.டபிள்யூ. குன்சேகர மற்றும் ஈ.டி. விக்கிரமநாயக்க) அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்திய போதிலும் அவர் இதைச் செய்தார்.
நீதித்துறை தொடர்பான ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் டத்தோ பரம் குமாரசாமி, ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இது ஒரு பாரதூரமான தவறான செயல் என்று பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.. , “இந்த நியமனம் நீதித்துறையின் சுதந்திரத்தை நேரடியாக பாதிக்கிறது. மேலும் இரு மனுக்களும் பணி நியமனம் செய்யப்படுவதற்கு முன்பே விசாரிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்று மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
பாரம்பரியமாக, புதியபிரதம நீதியரசர் பதவியேற்புவைபவத்தை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்து வந்தது. ஆனால் புதிய பிரதம நீதியரசராக சரத் என் சில்வா பதவியேற்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரசாயன பொறியியலாளர் ஜயசேகர தனது மனைவிக்கு எதிராக தாக்கல் செய்திருந்த விவாகரத்து வழக்கில் மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் சட்டவிரோதமான மற்றும் அடக்குமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில்குற்றவாளி யென அறிவிக்கப்பட்டிருந்த மாவட்ட நீதிபதி உபாலி அபேரத்னவும் வைபவத்தில் கலந்துகொண்டமை அடுத்த முக்கியமான விடயமாகும். பொறியலாளர்ஜயசேகர வழக்கில் மனைவியை முதலாவது பிரதிவாதியாகவும் மற்றும் சரத் சில்வாவை வழக்கின் இணை பிரதிவாதியாக்கியுமிருந்தார்
சரத் சில்வா பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டதன் பின்னர் நீதித்துறைக்கு ஏற்பட்ட பாரிய சேதத்தை நான் மீண்டும் கூறப்போவதில்லை. அதன் பிறகு நடந்தது அனைவரும் அறிந்ததே. நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவும் நீண்டகாலமாக ஊழல்வாதியான பிரதம நீதியரசருடன் கைகோர்த்து, அவர் பின்பற்றிய அழிவுச் செயற் பாட்டில் ஆதரவளிக்கும் கொள்கையைப் பின்பற்றினார். என் புகார் மீதான விசாரணைக்கு பொறுப்பான நீதித்துறை அதிகாரியாக அவர் இருந்தவர் ; எனது புகாருக்கு என்ன நடந்தது என்பதை அறிய எனக்கு உரிமை உள்ளது மற்றும் அதற்கு என்ன நடந்தது என்பதை அவர் எனக்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்
இதையடுத்து அவரும் பிரதம நீதியரசருடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டார். அதன்பிறகு, பிரதம நீதியரசர் தன்னை மோசமான வார்த்தைகளால் திட்டியதாக குற்றம் சாட்டி, நீதிச் சேவை ஆணைக்குழுவில் இருந்து ராஜினாமா செய்தார். பின்னர் அவர்பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டபோது,நீதித்துறையில் ஏற்பட்ட சரிவை மாற்றியமைக்க அவர் எதுவும் செய்யவில்லை. அவருக்கு எதிரான குற்றப் பிரேரணையில், அரசாங்கத்தின் அபிலாஷைகளின் குறுகிய தன்மை மற்றும் நியாயமான விசாரணையை மறுத்து, பதவியில் இருந்து நீக்கும் முயற்சியின் வெறித்தனமான தன்மை காரணமாக நான் அதை எதிர்த்தேன். மூன்றாவது காரணம், நீதித்துறை மீதான அரசாங்கத்தின் தலையீடுகளை வலுப்படுத்த முனைந்ததாகும்.
எவ்வாறாயினும், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் சிபாரிசின் பேரில் அவர் உயர் நீதிமன்றில் இணைந்த போது பெத்தகனையில் இருந்து தனக்கு வழங்கப்பட்ட காணியை மறுத்து நாரஹேன்பிட்டி மொடல்பாம் வீதியில் இருந்து பெறுமதியான 17.95 பேர்ச்சஸ் காணியைபெற்ற விதமும் பிரச்சினைக்குரியது. , அவருக்கு எதிரான குற்றப் பிரேரணையில்1 முதலாவது குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள கதையும் பிரதம நீதியரசர் மீது நியாயமான சந்தேகத்தை எழுப்புகிறது. நாட்டின்பிரதம நீதியரசர் தனது முன்னி லையில் விசாரணையில் உள்ள வழக்கு தொடர்பான சொத்தை வாங்குவதில் எந்த வகையிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது. மேலும், பிரதம நீதியரசரின் கணவர் ஒரு முக்கிய அரசியல் நியமனமாக கருதக்கூடிய பதவியை வகித்தமை, பிரதம நீதியரசர் பதவியின் கௌரவத்திற்கும் நீதித்துறையின் கௌரவத்திற்கும்அமைவானதாகவில்லை .
அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறி ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள அனுமதி இல்லையென்றாலும் கட்சிகளை இழக்காமல் ஆளும் கட்சியில் இணையும் ஊழல் முறைமை நீதித்துறையின் அனுசரணையுடன்சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் தான் ஏற்படுத்தப்பட்டது
- பினான்சியல் டைம்ஸ் -
Post a Comment