இலங்கைக்கு இந்தியா கொடுத்த கடன் திரும்புமோ, இல்லையோ..??
இலங்கைக்கு இந்தியா கொடுத்த கடன் திரும்புமோ இல்லையோ முதலில் தமிழக மீனவர்களின் 105 படகுகள் திரும்ப வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“இலங்கை அரசின் பிடியிலிருக்கும் 105 மீனவப் படகுகளும் மீட்கப்பட வேண்டும் அலைவிரிக்கும் சமுத்திரத்தில் வலைவிரிக்கும் மீனவர்க்குப் படகுதான் கடல் கடவுள்.
அவை உரியவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் இலங்கைக்கு இந்தியா கொடுத்த கடன் திரும்புமோ இல்லையோ முதலில் படகுகள் திரும்ப வேண்டும்.”
இலங்கை அரசின்
பிடியிலிருக்கும்
105 மீனவப் படகுகளும்
மீட்கப்பட வேண்டும்
அலைவிரிக்கும் சமுத்திரத்தில்
வலைவிரிக்கும் மீனவர்க்குப்
படகுதான் கடல் கடவுள்.
அவை உரியவரிடம்
ஒப்படைக்கப்பட வேண்டும்
இலங்கைக்கு
இந்தியா கொடுத்த கடன்
திரும்புமோ இல்லையோ
முதலில்
படகுகள் திரும்ப வேண்டும்
— வைரமுத்து (@Vairamuthu) January 24, 2022
Post a Comment