அலி சப்ரியின் கருத்தை, கண்டிக்கிறார் கரு ஜயசூரிய
இதுதொடர்பில் அவ்வியக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய, நேற்று (31) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதில் மேலும் தெரிக்கப்பட்டிருந்ததாவது, அரசாங்கத்துக்குள் அத்தகைய நடவடிக்கையால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் அல்லது அதை திரும்பப் பெற வேண்டும் என்பது எங்களின் வலுவான கருத்து.
தொழிற்சங்கத்தின் உரிமைகளும் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமையாகும். அதேவேளை, இந்த உரிமைகள் உழைக்கும் மக்களின் பறிக்க முடியாத உரிமை மட்டுமல்ல, சமூகத்தின் நியாயப்படுத்தல் மற்றும் நீடித்த அமைதிக்கான ஒரு சக்திவாய்ந்த காரணியாகவும் பார்க்க முடியும்.
அதற்கமைய, இவ்வாறான முயற்சிகளை முறியடிக்க நாட்டிலுள்ள அனைத்து உழைக்கும் மக்களையும் நிபந்தனையின்றி ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
உழைக்கும் மக்களின் உரிமைகளை நசுக்கத் தயாராகும் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக நிற்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment