Header Ads



பிரியந்தவின் குடும்பத்திற்கு பெரும் தொகை நிதியுதவியை வழங்கிய பாகிஸ்தான்


பாகிஸ்தானில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை மேலாளர் பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 100,000 அமெரிக்க டொலர் நிதியும் முதல் சம்பளம் 1667 அமெரிக்க டொலரும் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவலை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சி PTI வெளியிட்டுள்ளது.     

கடந்த டிசம்பர் மாதம் ஆரம்ப பகுதியில் பாகிஸ்தானில் பணி புரிந்து வந்த, இலங்கையரான பிரியந்த குமார அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். அத்துடன், அவர் உயிருடன் எரிக்கப்பட்டிருந்தார்.

பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பொது முகாமையாளராக பிரியந்த குமார பணியாற்றினார். இந்நிலையில் குறித்த தொழிற்சாலையின் ஊழியர்களால் பிரியந்த குமார அடித்துக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பில் 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நட்டஈடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, பாகிஸ்தான் அரசாங்கம் நட்டஈட்டை வழங்கியுள்ளது. பிரியந்த குமார மனைவியின் வங்கி கணக்குக்கு பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. இவ்வாறு வங்கி கணக்குக்கு வைப்பிலிட்டமைக்கான ஆவணங்களை PTI கட்சி, வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.