Header Ads



ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில், முஸ்லிம்கள் தமது கருத்துக்களை முன்வைக்கவேண்டும் - ஜம்மியத்துல் உலமா கோரிக்கை


ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி தொடர்பில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் முஸ்லிம்கள் தமது கருத்துக்களை முன்வைக்கவேண்டும் என்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

மார்க்க விவகாரங்களுக்கான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் வழிகாட்டல்கள் தொடர்பில் இன்று (30) கொழும்பு ஷாஹிரா கல்லுாரியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் செயலாளர் அல் ஷேய்க் எம் அர்கம் நுார் அமீத் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த செயலணி, ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வமான செயலணி என்பதால், அதில் முஸ்லிம்கள் தமது கருத்துக்களை முன்வைக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த குழுவின் தலைவர் தொடர்பில் பலருக்கும் பல கருத்துக்கள் உள்ளன.

எனினும் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டமையால் அதற்கு அதிகாரம் இருக்கிறது.

எனவே ஜனநாயக ரீதியாக தமது முரண்பட்ட கருத்துக்களை, எவரும் அந்த செயலணிக்கு சென்று பதிவுசெய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையிலான இந்த செயலணி தொடர்பில் முன்னர் முஸ்லிம்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

4 comments:

  1. வருமுன் காப்பானாம் புத்திசாலி. முட்டிய பின்தான் முடிவெடுப்பானாம் முட்டாள். ....

    ReplyDelete
  2. One country one law muslims no need to given any informations idea for this group untill that commision leader should change.Who´s that terror monk!!

    ReplyDelete
  3. யாராவது வாக்குமூலம் வழங்கச் சென்றால் தயவுசெய்து இந்த செயலணிக்கு எந்த தகுதியும் அருகதையுமற்ற ஒருவன் நியமிக்கப்பட்டிருப்பது இந்த நாட்டின் அரசியலமைப்புக்கு முரணானது என கூறிவிட்டுவந்தால் அது மிகவும் பிரயோசனமான ஒரு வலுவான தீர்மானமாக அமையும்.

    ReplyDelete
  4. முஸ்லீம்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் நீங்கள் உங்கள் கருத்துக்களை முதலில் இந்த ஆணைக்குழுவுக்கு முன்வையுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.