Header Ads



ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கை, தூதரகத்தை மூடுகிறது இலங்கை


ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலிலுள்ள இலங்கைத் தூதரகத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் சட்டப்பூர்வமான அரசு திடீரென சரிந்ததுடன் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து ஏற்பட்டுள்ள நெருக்கடியான அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறியமுடிகிறது.

காபூலை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, காபூலுக்கான இலங்கைத் தூதுவர் தனிப்பட்ட விடுமுறையில் இலங்கை திரும்பியதால், தூதரகம் செயற்படவில்லை என்று தெரியவருகிறது.

இதன்படி, காபூலில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடுவதற்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு செய்த பரிந்துரைரைக்கு அமைய  ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் தூதரகம் மூடப்பட்டவுள்ளது.

1 comment:

  1. காபூலில் உள்ள இலங்கைத் தூதரகத்தை மூடுவதற்கு ஏதோ முக்கியமான வேறு காரணங்கள் இருக்கும் போது அரசாங்கம் உண்மையை மறைத்து மலுப்புவது போல்தான் தெரிகிறது.

    ReplyDelete

Powered by Blogger.