Header Ads



'போர்ட் சிட்டி'யில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம்


கொழும்பு துறைமுக நகரத்திற்கு பொது மக்கள் பெருவாரியாக செல்வதன் காரணமாக புதிய கோவிட் கொத்தணி ஏற்படலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

சுகாதார பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் இதனை எமது செய்தி சேவையிடம் உறுதிப்படுத்தினார்.

துறைமுக நகரத்தில் 500 மீற்றர் தூரமான நடைபாதை திறந்து வைக்கப்பட்டதை அடுத்து அதனை பார்வையிடுவதற்காக பெருமளவான மக்கள் அங்கு செல்கின்றனர்.

தவறான தகவல் பரிமாற்றம் காரணமாகவே, பொது மக்கள் அதிகளவில் துறைமுக நகரத்தில் ஒன்று கூடுவதாக ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.

துறைமுக நகரில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் நடைபாதையை விரைவில் சென்று பார்த்தால் மாத்திரமே இலவசமாக பார்க்க முடியும் என்றும், எதிர்காலத்தில் அதனை பார்ப்பதற்கு கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும் என்ற தகவல் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டுள்ளது.

எனினும் இது தவறான தகவல் என ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.

எனவே இந்த விடயம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவேண்டும் என்று ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

ஹேமந்த ஹேரத்தின் தகவலை அடுத்து, எமது TW , கொழும்பு துறைமுக நகர முகாமையுடன் தொடர்புகொண்டு வினவியது.

கொழும்பு துறைமுக நகரத்துக்கு வரும் மக்கள், துறைமுக நகரம் முழுவதையும் பார்ப்பதற்கான வாய்ப்பில்லை. அங்கு அமைக்கப்பட்டுள்ள 500 மீற்றர் நடைப்பாதையை மாத்திரமே பார்வையிடமுடியும்.

இந்தநிலையில் தற்போது இந்த நடைபாதையை இலவசமாக பார்க்கமுடியும் என்றும், எதிர்காலத்தில் அதற்காக கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும் என்ற தகவலை துறைமுக நகர முகாமை மறுத்தது.

பொதுமக்களின் நன்மைக்கருதியும், கொவிட் கொத்தணியை தவிர்க்கும் வகையிலும், எதிர்காலத்தில் செயலி ஒன்றின் ஊடாக முன்கூட்டியே அறிவித்து, துறைமுக நகரத்தை பார்வையிட முடியும்.

எனவே கொரோனா கொத்தணி ஏற்படுவதை தவிர்க்கும் முகமாக மக்கள் அவசரப்பட்டு, துறைமுக நகருக்குள் கூடவேண்டாம் என்று அதன் முகாமை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. TW

No comments

Powered by Blogger.