Header Ads



தற்கொலைக்கு அனுமதி கோரி ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கு கடிதம் அனுப்பிய சட்டத்தரணி


தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு, சட்டத்தரணி ஒருவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த கடிதத்தின் பிரதிகள் சபாநாயகர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பி.ஏ.டபிள்யூ அபேவர்தன என்ற சட்டத்தரணியே உயிரை மாய்த்துக்கொள்ள அனுமதி கோரி கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் அங்கம் வகித்து வந்த தம்மை காரணம் எதுவும் கூறாமல் நீக்கியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்களின் வரிப்பணத்தில் பாலர் வகுப்பு முதல் உயர்தரம், பல்கலைக் கழகம் வரையில் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்ட தமக்கு, நாட்டுக்கு மக்களுக்கு சேவையாற்ற அனுமதி வழங்கப்படவில்லை என அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

மக்களிடம் தாம் பட்ட கடனை செலுத்த முடியாத காரணத்தினால் தாம் தற்கொலை செய்து கொள்ள ஜனாதிபதி அனுமதிக்க வேண்டுமென கோரியுள்ளார்.

காணி மறுசீரமைப்பு ஆணைணக்குழுவில் கடமையாற்றிய காலத்தில் தாம் பல்வேறு ஊழல் மோசடிகளை அம்பல்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி - ஹந்தானை பிரதேசத்தில் காணியொன்று சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டமை சம்பவம் தொடர்பில் அம்பலப்படுத்திய காரணத்தினால் தம்மை ஆணைக்குழுவிலிருந்து வெளியேற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே மக்களுக்கு கடனை செலுத்த முடியாத காரணத்தினால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டுமென அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Very, Very Interesting letter. Will the writer, Abeywardene, Attorney at Law, get any reply? Not much chance that he will get a reply. Lets wait and see.

    ReplyDelete
  2. அபேரத்ன என்ற இந்த சட்டத்தரணிக்கு அவருடைய உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமையை இந்த நாட்டுச் சட்டம் அவருக்கோ அல்லது இந்த நாட்டில் வாழும் யாருக்கும் அந்த உரிமையைச் சட்டம் வழங்கவில்லை. எனவே அந்த அனுமதியை வழங்கும் உரிமை சனாதிபதியிடமோ அல்லது பிரதமரிடமோ அலலது வேறு யாரிடமோ இல்லை. அவருக்கு உயிரை வழங்கியவர் அவருக்கு விரும்பிய நேரத்தில் எடுத்துக் கொள்வார். எனவே சட்டம் அரைகுறையாகப் படித்த ஒரு சட்டத்தரணியாகத் தான் அவர் வாழுகின்றார்.முதலில் அவரை அங்கொட வைத்தியசாலையில் பரீசீலனைக்கு உற்படுத்தப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.