Header Ads



மத ஸ்த்தானங்களில் சுகாதார வழிமுறைகளின் சிலதை, தளர்த்த மேலதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா..?


- Ismathul Rahuman -

    பஸ்களிலும், புகையிரதங்களிலும் பயணிகள் நிரம்பி வழியும் போது மத ஸ்தானங்களில் மாத்திரம் ஒரு மீட்டர் தூர இடைவெளியை  கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது எதற்காக என கேள்வி எழும்புகின்றனர்.

     பஸ் வண்டிகளிலும், புகையிரதங்களிலும் பயணிகள் ஆசனங்களுக்கு மேலதிகமாக நின்றுகொண்டும் கதவுகளில் தொங்கிக்கொண்டு செல்வதை காணக்கூடியதாக உள்ளன. ஒரு பிரயாணி

 ஓர் இடத்தில் இறங்கும் போது அந்த ஆசனத்தில் உடணடியாக அடுத்த பயணி அதில் அமறுகின்றனர். இறங்கும்போதும் நெறிசலுக்கு மத்தியில் முட்டிமோதிக்கொண்டே இறங்குகின்றனனர். இங்கே எந்தக் தொட்டுநீக்கியும் பயன்படுத்தப்படுவதில்லை.இதனை அவதாணிப்பதற்கோ சுகாதார வழிமுறைகளை அமுல்படுத்துவதற்கோ எவருமில்லை. பள்ளிவாசல்களில் தொழும்போதும் ஏனைய மதவழிபாடுகளின்போதும் ஒரு மீட்டர் தூர இடைவெளி கண்டிப்பாக பின்பற்றப்படுகின்றன. தொழுகை விரிப்புகள் எடுத்துவர வேண்டியுள்ளன. 10, 15 நிமிட தொழுகைகளுக்காக சுகாதார விதிமுறைகளை கட்டாயப்படுத்தும் அதிகாரிகள் போக்குவரத்தின்போது  நீணட தூரம் பலமணி நேரம் நெறிசலுக்கு மத்தியில் பயணிக்கும் போது நடப்பவற்றை கண்டுகொள்வதில்லை. இதே நிலமைகள்தான் சந்தைகளிலும், பொருட்களை கொள்வனவுசெய்ய நீண்ட வரிசைகளில் நிற்கும்போதும் பல்வேறு வைபவங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும்,கூட்டங்களிலும் காணக்கூடியதாகவுள்ளன.

  நீண்ட வாரஇறுதி விடுமுறையின் போது நாட்டின் நாலாபகுதிகளுக்கும் சுற்றுலா சென்று வருகின்றனர். மேலும் பொழுபோக்கு இடங்களையும் கண்டுகளிக்கச் செல்கின்றனர் இங்கெல்லாம் சன நெறிசல் காணப்படுவதுடன் எந்த சுகாதார வழிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை என மக்கள் அங்களாய்க்கின்றனர்.

  இறைவனைத் தொழுவதற்காகவும், தமது தேவைகளை முன்நிறுத்திப் பிரார்திப்பதற்காகவும் மதஸ்தானங்களுக்கு வரும் மக்களுக்கு மாத்திரம் ஏன்இந்தக் கட்டுப்பாடு என மக்கள் கேட்கின்றனர்.

  எனவே இவ்வாறான நிலமையில் மத ஸ்தானங்களில் நடைமுறைப்படுத்தப்படும் சுகாதார வழிமுறைகளின் சிலதை தளர்த்துவதற்கு பொறுப்புவாய்ந்த மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

2 comments:

  1. Furkanhaj@ yahoo.com:-பள்ளிவாயல்களில் நடைமுறையில் உள்ள எந்த நடைமுறையையும் தளர்த்தக்கூடாது.இப்போது தான் ஓரளவு நிம்மதியாக தொழுது வருகிறோம்.சுற்றுலா செய்பவர்களையும்,பஸ்பிரயாணிகளையும் காரணம் காட்டி பள்ளி வாசல்களிலும் தளர்வை ஏற்படுத்தினால் நாமே நமது தலையில் மண்ணைவாரிப்போட்டது போலாகும்.பள்ளிவாசல் மூலம் கொரனா பரவியது என்று ஒருமாயை ஏற்பட்டால் பள்ளியையே மூடச்சொல்வார்கள். வேண்டாம் இந்த முயற்சி இருப்பதை கொண்டு நிம்மதியாக தொழுது வருவோம். மாஷா அல்லாஹ் இதுவே போதும்.நிலமை சீராகட்டும்.பின்னர் பார்த்துக்கிட்டு.

    ReplyDelete
  2. Furkanhaj@ yahoo.com:-பள்ளிவாயல்களில் நடைமுறையில் உள்ள எந்த நடைமுறையையும் தளர்த்தக்கூடாது.இப்போது தான் ஓரளவு நிம்மதியாக தொழுது வருகிறோம்.சுற்றுலா செய்பவர்களையும்,பஸ்பிரயாணிகளையும் காரணம் காட்டி பள்ளி வாசல்களிலும் தளர்வை ஏற்படுத்தினால் நாமே நமது தலையில் மண்ணைவாரிப்போட்டது போலாகும்.பள்ளிவாசல் மூலம் கொரனா பரவியது என்று ஒருமாயை ஏற்பட்டால் பள்ளியையே மூடச்சொல்வார்கள். வேண்டாம் இந்த முயற்சி இருப்பதை கொண்டு நிம்மதியாக தொழுது வருவோம். மாஷா அல்லாஹ் இதுவே போதும்.நிலமை சீராகட்டும்.பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.

    ReplyDelete

Powered by Blogger.