Header Ads



எரிவாயு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த குடும்ப அங்கத்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர்


அரசாங்கத்திற்கு மனிதாபிமானம் என்ற பெயரே கிடையாது எனவும்,அவ்வாறான உணர்வு இருந்தால் இவ்வாறு உணர்வற்ற விதமாக நடந்து கொள்ள மாட்டார்கள் எனவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எரிவாயு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை எதிர்க்கட்சித் தலைவரை இன்று (18) சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எரிவாயு வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இன்று நிதியுதவியும் வழங்கி வைத்தார்.

நாடு முழுவதும் எரிவாயு வெடித்ததில் பல உயிர்கள் பலியாகியுள்ளன என்பதோடு, மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.நாட்டை எரிவாயு வெடிக்கும் நிலைக்கு கொண்டு வந்ததற்கு பொறுப்பான அனைவரும் பதவி விலக வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய எரிவாயு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி இலவச சட்ட உதவிகளை பெற்றுத்தருவதாகவும்,எதிர்கால ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.