போர் முடிந்தபின் 80 வீதமான வெளிநாட்டு நாணயங்கள், சட்டவிரோதமாக நாட்டுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டன
இலங்கையில் டொலர் பிரச்சினை ஏற்படுவதற்கு பிரதான காரணங்களை முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வெளிப்படுத்தியுள்ளார்
2009ம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், 2011ஆம் ஆண்டுக்காலத்தில் 80 வீதமான வெளிநாட்டு நாணயங்கள், சட்டவிரோதமாக நாட்டுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டன.
இந்த வெளிநாட்டு நாணயங்கள், துபாய்க்கு கொண்டு செல்லப்பட்டதா? கம்பூச்சியாவுக்கு கொண்டு செல்லப்பட்டதா? யுக்ரெய்னுக்கு அல்லது வேஜினியாவுக்கு கொண்டு செல்லப்பட்டதா என்பதே கேள்வியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக்காலப்பகுதியில் எந்தவொரு திட்டமும் இல்லாமல், பாரிய திட்டங்களுக்கு கடன்கள் பெறப்பட்டன.
2010 முதல் 2015ஆம் ஆண்டு வரை அதிவேக பாதைகளுக்காக பாரிய கடன்கள் பெறப்பட்டன. அத்துடன் வணிக கடன்கள் பெறப்பட்டு அவை அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட்டன.
அதேநேரம் 10 வீதம் 15வீதம் என்ற அளவில் இல்லாமல், அதிவேக வீதிகளின் அமைப்புக்களின்போது 200 அல்லது 400 வீத தரகு மோசடிகள் மற்றும் கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன.
இந்தவகையில் 1948 முதல் - 2014ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நுாற்றுக்கு வெளிநாட்டு 14வீத நிதிகளே கடனாப்பெறப்பட்டன.
எனினும் 2005 முதல் 2015ஆம் ஆண்டுகளில் மாத்திரம் 78 வீதக்கடன் பெறப்பட்டுள்ளதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இன்று மத்திய வங்கி 38.5 பில்லியன் டொலர்களை கடனாக பெற்றுள்ளது.
இதனை தவிர தனியார் துறையினரையும் சேர்த்து 55 மொத்தமாக பில்லியன் டொலர்கள் கடன் பெறப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவுக்கு 1.6 டொலர்களுக்கு எஸ்ட்ராசெனேகா தடுப்பூசி அனுப்பப்பட்ட போதும், அதனை இலங்கை 16 டொலர்களுக்கு இறக்குமதி செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு விஞ்ஞான ரீதியில் தீர்வு காணப்படவில்லை.
2019 இல் வழங்கப்பட்ட வரிச்சலுகை காரணமாக 40வீத வரி வருமானம் இழக்கப்பட்டது.
அத்துடன் வெளிநாடுகளுக்கு கடன்களை செலுத்தமுடியாதநிலை ஏற்பட்டது.
எந்தவொரு திட்டமும் இல்லாமல், ஒரு லட்சம் பேர் அரச துறையில் இணைக்கப்பட்டனர்.
இவை அனைத்தும் பிழையான பொருளாதார முறைகளாகும்.
பல மில்லியன் டொலர்களை செலவிட்டு, சுவாமி தரிசனத்துக்கு சென்றவர்கள், சுவாமிக்கு பால் ஊற்றி தரிசனம் செய்யும்போது, இலங்கையில் பால்மாவுக்காக பல தாய்மார் அலைந்து திரிந்த வேதனையை காணமுடிந்தது.
இதேவேளை இன்று இலங்கை கடனை செலுத்துவதற்கு கஸ்டப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், கடன் கொடுப்பதற்கும் எந்த நாடும் நிறுவனமும் முன்வர மறுப்பதாக பாட்டலி குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் இலங்கைக்கான வணிகச்சந்தை மூடப்பட்டுள்ளமையை காணமுடிவதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். Tw
Post a Comment