Header Ads



இலங்கையின் பெற்றோலிய கொள்வனவுக்காக 500 மில்லியன் டொலர் கடன் வழங்கியது இந்தியா


பெற்றோலிய உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்காக 500 மில்லியன் டொலர் கடனை இந்தியா வழங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.

நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கருக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை (15) இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையிலேயே மேற்குறிப்பிட்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த மெய்நிகர் கலந்துரையாடலில், அத்தியாவசிய பொருட்களுக்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதி மற்றும் எரிபொருள் வாங்குவதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கடிதம் வழங்குவது குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. சீனா செய்வது போல், இந்தியாவும் தான் கொடுக்கும் கடனுக்காக இலங்கையின் பகுதிகளை எழுதி வாங்குவதே சிறந்தது.
    திருகோணமலை எண்ணெ குதங்களை பெற்றதை போன்று, திருகோணமலை துறைமுகம், ஒலுவில் துறைமுகம் போன்றவற்றையும் இந்தியா பெறவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.