சவூதியில் 'அல்-தவீல் சேவிஸ்' நிறுவனத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய இலங்கையர்களின் ஒன்றுகூடல்
சுமார் 80 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்வு, தெகிவலை, ஜனானந்த வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. "அல்தவில் புட் சேர்விஸ்" நிறுவனத்தில் பணிபுரிந்த இவர்கள், சுமார் 40 வருடங்களின் பின் இலங்கைத் திருநாட்டில் முதன்முறையாக சந்திக்கும் நிகழ்வாக இந்த ஒன்றுகூடல் அமைந்திருந்தது.
இங்கு சமூகமளித்த அனைவரும் தமது இளமைப்பருவத்தைக் கடந்தவர்களாக இருந்ததோடு, அனைவரும் பெருமகிழ்ச்சியோடும், குதூகலத்தோடும் காணப்பட்டனர். நாட்டின் நாலாபுறத்திலிருந்தும் இவர்கள் சமூகமளித்திருந்தமை ஒன்றுகூடலை மென்மேலும் மெருகூட்டியது. பலரது சொற்பொழிவுகளும், கலை நிகழ்ச்சிகளும் இந்நிகழ்வை அலங்கரித்ததோடு பகற்போசன ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
அத்தோடு வருகை தந்த அனைவரும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இறுதியாக, இவ் வொன்றுகூடலைத் தொடர்ந்து இந்த அமைப்பு தொடர்ந்து இயங்கவென ஒரு செயற்குழு அமைக்கப்பட்டு அதற்கான அங்கத்தவர் தெரிவும் நடைபெற்றது.
இவ்வமைப்பில் இணைய விரும்பும் முன்னாள் "அல்-தவீல் புட் ஸேவிஸ்" ஊழியர்கள், பின்வரும் செயற்குழு உறுப்பினர்களில் ஓருவரோடு தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
0094722728585
Fahurudeen
0094777907810
Munas
00447846554525
After 40 years...MashaAllah Great...
ReplyDelete