Header Ads



'நாங்களே நன்றாகச் செய்தோம்' என்று சொல்லிக் கொண்டாலும், கடந்த 2 ஆண்டுகள் எல்லோருக்கும் சாபகாலமாகவே மாறியுள்ளது


வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களது உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதாக இருந்தால், தாங்கள் அதற்காக இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரிப்பதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார். 

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை அபத்தமானது.

'நாங்களே நன்றாகச் செய்தோம்' என்று சொல்லிக் கொண்டாலும், கடந்த இரண்டு ஆண்டுகள் ஏழை முதல் பணக்காரர் வரையில் எல்லோருக்கும் சாபகாலமாகவே மாறியுள்ளது.

ஜனாதிபதி கடந்த இரண்டு ஆண்டுகளில் தோல்வியுற்றுள்ளார். 

கொவிட் பரவல் காலத்தில் ஏனைய தெற்காசிய நாடுகளின் வெளிநாட்டு ஒதுக்கங்கள் 20 சதவீதத்துக்கு மேல் அதிகரித்திருக்கின்ற போதும், இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 70 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்திருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் ஜனாதிபதியின் உரையில் வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகள் சம்பந்தமாகத் தெரிவித்திருந்ததாகவும், அதுகுறித்து மாத்திரமே தாங்கள் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறிய நளின் பண்டார யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகளாகச் சிறைச்சாலைகளில் இருக்கின்ற வடக்கு கிழக்கு தமிழ் கைதிகளை விடுவிக்குமாறு கோரினார். 

No comments

Powered by Blogger.