மார்ச் 12 ஆம் திகதி, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின்; 25ஆவது வருடாந்த மாநாட்டை 2022 மார்ச் மாதம் 12ஆம் திகதி நடத்துவது என முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக் குழு கூட்டம் போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன் தலைமையில் அண்மையில் தெமடகொடயிலுள்ள வை. எம். எம். ஏ பேரவையில் நடைபெற்றது.
வருடாந்த மாநாடு மற்றும் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதங்கள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பில் உறுப்பினர்கள் பலர் விடுத்த வேண்டுகோள் மற்றும் நாட்டில் தற்பொழுது காணப்படும் நிலைமையை கருத்திற் கொண்டே போரத்தின் நிறைவேற்றுக் குழு மேற்படி கூட்டத்தில் விரிவாக ஆராய்ந்து மேற்படி தீர்மானத்தை ஏகமனதாக மேற்கொண்டுள்ளதாக மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் தெரிவித்தார்.
வருடாந்த மாநாடு 2022. ஜனவரி மாதம் 21ஆம் திகதி நடத்துவது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment