நாடு படுமோசமான நிலையில் வீழ்ந்து கிடக்கிறது - இராஜாங்க அமைச்சர்
அனைத்து தேசிய உற்பத்திகளும் பின்நோக்கி சென்றுள்ளன. இதனால், நாடு படுமோசமான நிலையில் வீழ்ந்து கிடப்பதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், விவசாயம், தொழிற்துறை, ஆடைத்தொழிற்துறை என அனைத்து தேசிய உற்பத்திகளும் பின்நோக்கிச் சென்று, நாடு படுமோசமான நிலையில் வீழ்ந்து கிடக்கிறது என்றார்.
எனவே இதனை இப்போதாவது புரிந்துகொண்டு நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் கூறினார்.
தேசிய தொழிற்துறையை இலக்காகக் கொண்ட கடன் இல்லாத நாட்டை எமது பரம்பரையில் உருவாக்க முடியாதுபோனாலும், எதிர்கால சந்ததியினருக்காவது உருவாக்க வேண்டும் எனவும் கூறினார்.
இந்த நிலைமையிலிருந்து நாட்டைக்காப்பாற்றத்தான் உம்மை பதவிக்கு இந்த நாட்டு மக்கள் அமர்த்தியிருக்கின்றார்கள். பதவியின் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு மக்களுக்கு கதையளக்க யாரும் உம்மைப் பதவியில் அமர்த்தவில்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு மக்களுக்கு விடிவை ஏற்படுத்துவதற்குப் பதிலாக மக்களை போலியாக பீதியை ஏற்படுத்தும் கதை அளக்கும் இந்தக் கழுதைகளை யார் பதவிக்குத் தகுதியில்லை என்பதை நிரூபித்த பின்னரும் ஏன் மக்கள் மௌனியாக இருக்கின்றார்கள் என்பது தான் கேள்வி.
ReplyDelete