ஆனந்த தேரரை மேடையில் கதறவிட்ட, காயத்ரி நவரத்ன - யார் இவர்...?
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரான பிக்குவுக்கு எதிர்ப்பை வெளியிட்ட மாணவி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றதுடன் மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் வேந்தரான முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு எதிர்ப்பை காட்டும் வகையில் அவரிடம் இருந்து பட்டமளிப்புக்கான பேழையை பெற மறுத்தனர்.
இவ்வாறு எதிர்ப்பை வெளிக்காட்டிய மாணவி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனந்த தேரருக்கு தனது எதிர்ப்பை காட்டி மாணவி காயத்ரி நவரத்ன, உபவேந்தரிடம் இருந்து பட்டமளிப்பு பேழையை பெற்றுக்கொண்டார்.
இந்த யுவதி தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையத்தின் இணைப்பதிகரியாக கடமையாற்றியுள்ளார். 2014 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சையில் கலைத்துறையில் நாடளாவிய ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.
பல்கலைக்கழக வேந்தருக்கு தனது எதிர்ப்பை காட்டிய இந்த யுவதி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் மஹீல் பண்டாரவின் காதலி எனவும் கூறப்படுகிறது.
மஹீல் பண்டார, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உருவாக்கிய “உண்மையான தேசப்பற்றாளர்கள்” இளைஞர் அமைப்பின் செயற்பாட்டு ரீதியான உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இவர், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.
Post a Comment