எரிவாயு வெடிப்புகளால் மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து, இப்பிரச்சினையையும் வேறு தளத்திற்கு கொண்டு செல்ல முயற்சிப்பது வருந்தத்தக்கது
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை.
நாடு முழுவதும் எரிவாயு கசிவுடன் தொடர்புடைய வெடிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறன. இதுவரை 30க்கும் மேற்பட்ட எரிவாயு சிலின்டர்களின் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த வெடிப்புகளால் நாட்டு மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனினும், அரசாங்கம் வழமை போன்று இப்பிரச்சினையையும் வேறு தளத்திற்கு கொண்டு செல்ல முயற்சிப்பது வருந்தத்தக்கது. மேலும் வெடிப்பது எரிவாயு தொட்டிகள் அல்ல என்றும் ரெகுலேட்டர்கள் மற்றும் கேஸ் அடுப்புகளின் மீது குற்றம் சாட்டி, பொறுப்புள்ள அமைச்சர்கள் யாரைப் பாதுகாக்கப் பார்க்கிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறோம்.
மிகவும் பாதகமான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு எரிவாயு கொள்வனவு செய்வதால் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அண்மையில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்திருந்தார். அந்த ஒப்பந்தத்தின் மூலம் மோசடி நடந்துள்ளது என்பது தெளிவாகிறது.லிட்ரோ நிறுவனத்திற்கு குறைந்தது 10 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அது யாரோ ஒருவரின் சட்டைப்பையில் விழுந்துள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த மோசடியில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட, மக்களை ஆபத்தில் ஆழ்த்திய வன்னம் கேஸ் சிலிண்டரின் கொள்ளளவை மாற்றினார்களா என்ற நியாயமான சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.இதே போல் கேஸ் சிலிண்டரின் கொள்ளளவை மாற்றி சிலிண்டரை இதற்கு முன்னதாகவே சந்தைக்கு விடுத்து வாயுவின் கலவை மாற்றப்பட்டது என்பது இரகசியமல்ல.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பொல அவர்கள்,எரிவாயு தொடர்பான வெடிப்புகள் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு அவதானிப்பு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதை பொதுமக்கள் அறியும் வகையில் கூட வெளியிடப்படவில்லை.
இலங்கை தர நிர்ணய சபையிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்குக் கூட இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. எரிவாயு தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்ட போது அமைச்சர்கள் சபையில் இல்லாதது குறித்து கௌரவ சபாநாயகர் அவர்களே கவலை வெளியிட்டார்.
ஜனாதிபதியால், முன்பு போலவே, இது குறித்து விசாரிக்கவென பெரிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கைகள் சார்ந்த உண்மையான சிக்கலை மூடி மறைப்பதற்கான ஒரு முயற்சியே அன்றி இது வேறு ஒன்றும் இல்லை.இதற்குள் கலவையை மாற்றிய எரிவாயு தொட்டிகள் வெடிக்கும் அல்லது தீர்ந்துவிடும்.இப்பிரச்னையை இப்படியே முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிகிறது.
இந்த தீவிர மோசடியை இனிமேலும் மேற்கொள்ளாது, எரிவாயு மீதான மோசடி நடவடிக்கைகள் மற்றும் வாயு கலவையை மாற்றுவதன் மூலம் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வெடிப்புகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்துகிறது.
ரஞ்சித் மத்தும பண்டார,
பொதுச் செயலாளர்,
ஐக்கிய மக்கள் சக்தி
Post a Comment