கனடாவில் அடிவாங்கிய சாணக்கியன், முஸ்லீம்களுக்கு காணிப் பிரச்சினை இல்லை எனக்கூறிய போது கோமாவில் இருந்தவர்கள் பற்றி கவலைப்படுகிறேன்
இனவாதம் என்பது ஒரு இனத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமையை கேட்பது இனவாதம் அல்ல மாறாக இன்னும் ஒரு இனத்துக்கு கிடைக்க இருக்கின்ற நியாயமான உரிமையை கிடைக்காமல் தடுப்பதுதான் இனவாதமாகும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான ஹாபீஸ் நஷீர் அஹமட் தெரிவித்தார்.
ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் 2020ம் ஆண்டு சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக காணி பங்கீட்டில் பெரிய இனவாதம் இடம் பெற்றுள்ளது ஒரு சமூகத்தை படுகுழியில் தள்ளிய விடயம் வடக்கில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றி இருக்கலாம் அது ஆயுத கலாச்சாரத்தில் இடம் பெற்றது ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்றது வேறு அரசியல் அதிகாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக முஸ்லீம் ஒருவர் இல்லாமல் போனது இந்த முறை மாத்திரம் தான் அப்படி இருந்த போதும் கடந்த காலங்களில் எமது காணிகள் எப்படி பறிபோனது இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.
இதனை பேச வேண்டிய தேவை உள்ளது ஏன் என்றால் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் கனடாவில் அடிவாங்கி விட்டு இங்கு வந்து பாராளுமன்றத்தில் பேசுகிறார் முஸ்லீம்களுக்கு நாட்டில் காணிகள் இல்லை மட்டக்களப்பில் பிரச்சினை இல்லை முஸ்லீம்கள் பிள்ளையானுடன் சேர்ந்து காணி இல்லை என்று சொல்லி நாடகம் ஆடுகிறோம். காணி இல்லை என்று சொல்லி எனக்கு அவர் சொன்னது பிரச்சினை இல்லை. அவர் சொன்ன கருத்திற்கு இந்த பிரதேசத்தில் இருந்து எவராவது ஏன் என்று கேட்காமல் கோமா நிலையிலா இருந்தீர்கள் என்ற கவலை தான் எனக்கு என்றும் தெரிவித்தார்.
நீங்கள் முஸ்லிம்கள் விடயத்தில் உங்களுக்கு கிடைத்த அதிகார சந்தர்ப்பங்களை வைத்து என்ன மயிர் பிடிங்கின?
ReplyDeleteTNA கனடா கூட்டத்தில் ஒரு சில தமிழர்களால் சுமந்திரனுக்கு எதிராகவே ஆர்பாட்டம் எதிர்ப்பு செய்யப்பட்டது, அது சாணக்கியனுக்கு எதிரானது அல்ல.
ReplyDeleteLtte க்கு எதிரான சில கருத்துக்களை சுமந்திரன் இலங்கையில் தெரிவித்தற்காகவே இந்த எதிர்ப்பு. சாணக்கியன் தாமாக சுமந்திரனுடன் வெளியேறிவிட்டார்.
யாரும் யாரையும் அடிக்கவில்லை.
நசீர், நீங்கள் தான் தேவையில்லாமல் சாணக்கியனை பொது விவாத்திற்கு அழைத்தீர்கள், இப்போ பயத்தில் பொய் பேசுறீங்க.