Header Ads



உலக சந்தையில் எரிபொருள் விலையில் வீழ்ச்சி


உலக சந்தையில் எரிபொருட்களுக்கான விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 
ஒமிக்ரோன் திரிபு காரணமாக எரிபொருட்களுக்கான விலைகளில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி நிலை பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் டபிள்யூ.ரீ.ஐ. ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 66.44 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.4.42 டொலர் வீழ்ச்சியடைந்துள்ளது.அதாவது 6.34 வீத விலை வீழ்ச்சி பதிவாகியுள்ள.

அமெரிக்காவின் டபிள்யூ.ரீ.ஐ. ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 66.44 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.4.42 டொலர் வீழ்ச்சியடைந்துள்ளது.அதாவது 6.34 வீத விலை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

பெர்ன்ட் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 69.69 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. 3.83 டொலர் வீழ்ச்சியடைந்துள்ளது.அதாவது 5.21 வீத விலை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கோவிட் தொற்றின் புதிய அலைகள் காரணமாக முடக்க நிலைகள் அறிவிக்கப்படும் என்ற அச்ச நிலைமை காரணமாக விலை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்படுகின்றது.

பிரித்தானியா, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் கோவிட் கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கேள்வியில் வீழ்ச்சி ஏற்படக் கூடும் என்ற காரணத்தினால் நேற்றைய தினம் உலக சந்தையில் இவ்வாறு மசகு எண்ணெய் விலை வீழச்சியை பதிவு செய்துள்ளது.


இதேவேளை, இலங்கையில் நேற்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.