Header Ads



குடும்பஸ்தரை 40 அடி உயரத்துக்கு தூக்கிச் சென்ற பட்டம் - யாழ்ப்பாணத்தில் சம்பவம்


- எஸ். தில்லைநாதன் -

பட்டம் விட்ட இளம் குடும்பஸ்தரை சுமார் 40 அடி உயரத்துக்கு பட்டம் தூக்கிச் சென்ற சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றது.

பருத்தித்துறை - புலோலி பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று இளைஞர்கள் பலர் கூடி அந்தப் பகுதியில்  பெரிய பட்டம் ஒன்றை பறக்க விட்டனர். பின்னர் அந்தப் படத்துடன் இன்னொரு பட்டத்தை இணைத்து விடுவதற்கு முனைந்தனர். 

அப்போது, இரண்டாவது பட்டத்தின் 'முச்சை' கயிற்றை பிடித்திருந்தவரும், முதல் பட்டத்தின் பறப்பு வேகத்தில் பறக்க ஆரம்பித்தார்.

சுமார் 40 அடி உயரம் வரை பறந்தவரை கீழிறக்க முடியாமல் இளைஞர்கள் திணறினர். 

சுமார், 5 நிமிடங்கள் பறந்த நபர் சுமார் 20 அடிவரை கீழிறங்கிய பின்னர் கையை விட கீழே விழுந்தார்.

1 comment:

  1. Luckily, the flying man didn't DROP HIS SUMMER SHORTS while flying with the kite in the sky.If he had dropped that there would have been a disaster to the onlooker on the ground as well as to him

    ReplyDelete

Powered by Blogger.