லிட்ரோ கொண்டுவந்த 3,700 டொன் எரிவாயுவை கப்பலில் இருந்து தரையிக்க வேண்டாமென உத்தரவு
லிட்ரோ நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட எரிவாயுவை கப்பலிலிருந்து தரையிறக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனத்துக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அதிரடி அறிவிப்பு விடுத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை 3, 700 மெட்ரிக் டொன் எரிவாயுவை லிட்ரோ நிறுவனம் கப்பலில் இலங்கைக்கு கொண்டுவந்திருந்தது.
குறித்த கப்பலில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள எரிவாயுவின் மாதிரியை சோதனைக்கு உட்படுத்தியபோது, அது இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் தரநிலையுடன் பொருத்தமற்றத்து என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, எரிவாயுவை கப்பலிலிருந்து தரையிறக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனத்துக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவிப்பு விடுத்துள்ளது.
Post a Comment