சதொச ஊடாக ரூ. 1,998 க்கு நிவாரணப் பொதி - நாளைமுதல் வீடுகளுக்கு வந்து வழங்க திட்டம்
இந்தப் பொருட்களின் விலை சந்தையிலுள்ள சில்லறை விற்பனை நிலையமொன்றில் ரூ.2,751க்கும் மற்றொன்றில் ரூ.2,489க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் சதொச ஊடாக அதனை ரூ. 1,998க்கு வீடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் பந்துல, இதன் மூலம் இந்த பொருட்கள் சதொசவில் கிடைக்கவில்லை என்ற கவலையை நீக்க முடியும் என்று தெரிவித்தார்.
பொதுமக்கள் இந்த நிவாரணப் பொதியை கொள்வனவு செய்ய 1998 என்ற இலக்கத்துக்கு அழைப்பதன் மூலம் பதிவு செய்யலாம் என்றும் இந்த விநியோகத்தை நாளை முதல் ஆரம்பிக்க சதொச ஏற்பாடு செய்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
0115 201 998 என்ற வட்ஸ்அப் எண்ணின் மூலம் உரிய நிவாரணப் பொதிகளை பதிவு செய்ய முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
சிறப்பு நிவாரணப் பொதியில் 10 கிலோ சம்பா அரிசி, 2 கிலோ பழுப்பு சீனி, 1 பக்கெட் நூடுல்ஸ், 100 கிராம் தேயிலை பக்கெட், 250 கிராம் நெத்தலி, 2 சவர்க்காரக் கட்டிகள் மற்றும் 1 பக்கெட் பப்படம் ஆகியவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment