100 நாட்கள் மாத்திரம் ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்ற நிபந்தனையுடன், பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த திட்டமா..?
சில நிபந்தனைகளுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிற்கான பொது வேட்பாளரை நியமிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
100 நாட்களே பொது வேட்பாளர் ஜனாதிபதியாக பதவி வகிப்பார் - நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதே அவரது முக்கிய நோக்கம் என்ற வாக்குறுதிகளை அடிப்படையாக வைத்து அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றுதிரட்டி பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை நீக்கும் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகவும்,அதற்கான திட்டங்களின் அடிப்படையிலும் நம்பகத்தன்மை மிக்க பொருத்தமான ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.
சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் இந்த யோசனையை முன்வைத்துள்ளனர். இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களுடன் இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment