பட்ஜட்டுக்கு ஆதரவளிப்பதில்லை என மு.கா. தீர்மானித்துள்ளது என்கிறார் ஹக்கீம் - முஸ்லிம் Mp க்கள் என்ன செய்யப் போகிறார்கள்..??
வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லை என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார்.
ரவூப் ஹக்கீம் தலைமையிலான அக்கட்சியின் உயர்பீட கூட்டம் இன்று (21) நடைபெற்றது. இதன்போதே வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உயர்பீட கூட்டத்தில் நிறைவு செய்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம், “வரவு செலவு திட்டத்தை ஆதரவாக வாக்களிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கலந்துகொண்டிருந்தார். ஏனையோருக்கு சுகயீனம் காரணமாக கலந்துகொள்ள முடியாது என அறிவித்துள்ளார்கள்” என தெரிவித்தார்.
Post a Comment