பௌத்தத்தை இழிவுபடுத்தியதாக அப்துல் ராசிக்குக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு - வெளிநாடு செல்ல தடை, CID யில் கையெழுத்திடவும் உத்தரவு
(எம்.எப்.எம்.பஸீர்)
பெளத்த தர்மத்தை இழிவுபடுத்தும் விதமாக கருத்து வெளியிட்டு அதனை இணையத்தளம் ஊடாக ஒளிபரப்பியமை தொடர்பில், தற்போது தடை செய்யப்பட்டுள்ள அமைப்பான சிலோன் தெளஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் அப்துல் ராசிக்குக்கு எதிராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
2013 ஏப்ரல் 6 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் பெளத்த தர்மத்தை இழிவு படுத்தும் விதமாக கருத்து வெலியிட்டமை ஊடாக, இன மத முரண்பாடுகளை ஊக்குவித்ததாக தெரிவித்தே இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அப்துல் ராசிக்குக்கு மேலதிகமாக எச்.சி.2973/21 எனும் குறித்த வழக்கில் ரஹ்மதுல்லாஹ் மொஹம்மட் ரியாஸ், மெக்பா அமீர் மொஹம்மட் தெளசீப் அஹமட் ஆகியோரும் பிரதி வாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க இலக்க சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3(1),3(3) ஆம் உறுப்புரைகள், தண்டனை சட்டக் கோவையின் 291(ஆ) அத்தியாயம் ஆகியவற்றின் கீழ், இந்த மூன்று பிரதிவாதிகளுக்கும் எதிராக 6 குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ய 3 சான்றுப் பொருட்களும், 9 சாட்சியாளர்களின் பெயர் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளதுடன், குற்றப் பத்திரிகையானது பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற 6 ஆம் இலக்க விசாரணை அறையில் வைத்து கடந்த 22 திங்களன்று கையளிக்கப்பட்டது.
இதன்போது அப்துல் ராசிக் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளும் மன்றில் அஜரான நிலையில், அவர்களுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் மன்றில் ஆஜரானார்.
இந் நிலையில் மூன்று பிரதிவாதிகளுக்கும் பிணை வழங்குமாரறு அவர் மன்றை கோரினார்.
இந் நிலையில், பிரதிவாதிகள் மூவரையும் தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை, 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.
அத்துடன் வெளிநாடு செல்ல பிரதிவாதிகளுக்கு தடை விதிக்கப்பட்டதுடன் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறு தினங்களில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டது.
அதன்படி இந்த வழக்கானது அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 2022 ஜனவரி 12 ஆம் திக்திக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக அப்துல் ராஸிக்குக்கு எதிராக குற்றவியல் வழக்கொன்றினை தொடுக்க முடியுமா என்பது தொடர்பில் உடனடியாக ஆராய்தல் வேண்டும் என உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு பரிந்துரை செய்திருந்தது. 2013 மே 6 ஆம் திகதி அவர் வெளியிட்ட கருத்தை மையப்படுத்தி இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli
மத நிந்தனை யார் செய்தாலும் தவறுதான். தண்டிக்கப்படுவது சிலர் மட்டும் என்பதே கவலைக்குரியது.
ReplyDeleteஞான சாரா பைத்தியம் ஐ நீதிபதி ஆக்கினாலும் இந்த பாவிகளின் உலகம் அங்கிகரிக்கும்.
ReplyDeleteஞான சாரா பைத்தியம் ஐ நீதிபதி ஆக்கினாலும் இந்த பாவிகளின் உலகம் அங்கிகரிக்கும்.
ReplyDeleteஞான சாரா பைத்தியம் ஐ நீதிபதி ஆக்கினாலும் இந்த பாவிகளின் உலகம் அங்கிகரிக்கும்.
ReplyDelete