மனிதர்கள் மத்தியில் ஒரு மாணிக்கமாக வாழ்ந்த, ஊடகத் துறை ஜாம்பவான் கானமைல்நாதன் - லத்தீப் பாரூக்
யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு செயற்பட்ட முக்கிய ஊடகவியலாளரான கனம் என்று பெரும்பாலானவர்களால் அறியப்பட்ட கானமைல்நாதன் 2021 நவம்பர் 22ல் காலமான செய்தி கேட்டு பெரும் கவலையுற்றேன்.
நான் அவரை முதன் முதலாகச் சந்தித்தது தற்போது செயல் இழந்துள்ள சுயாதீன பத்திரகா சமாஜத்தில் 1960 களின் நடுப்பகுதியில். நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள நீண்ட நாற்கள் செல்லவில்லை.
நேர்மையும் பணிவன்பும் மிக்க ஒரு நண்பனை நான் அவரில் கண்டேன். அப்போது அவர் வெள்ளவத்தையிலும் நான் கொள்ளுபிட்டியவிலும் வசித்து வந்தோம். பெரும்பாலும் வேலை முடிந்து இருவரும் ஒன்றாகவே பயணம் செய்வோம். மழை காலங்களில் நாம் இருவரும் எமது பகல் உணவை பகிர்ந்து கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு.
1970ல் நான் டெய்லி நியூஸ் பத்திரிகையில் இணையும் வரை இந்த நட்பு தொடர்ந்தது. பின்னர் நாம் இரு வௌ;வேறு நிறுவனங்களுக்காக பணியாற்;றிய போதும் எமது நட்பு தொடர்ந்து நீடித்தது. அதில் எந்தக் குறைவும் இருக்கவில்லை. இருவரும் பெரும்பாலான நாற்களில் எனது கொள்ளுப்பிட்டி இல்லத்தில் சந்தித்துக் கொள்வோம்.
1979ல் துபாயை தளமாகக் கொண்ட கல்ப் நியுஸ் தினசரி ஆங்கில பத்திரிகையை மீண்டும் கட்டி எழுப்ப இலங்கையில் இருந்து ஒரு குழு ஊடகவியலாளர்களை அழைத்துக் கொண்டு நான் துபாய் சென்ற போது, நான் எனது குழுவில் இணைத்துக் கொள்ள விரும்பிய முதலாவது நபராக அவரே இருந்தார். ஆனால் அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
பிற்காலத்தில் அவர் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட உதயன் தமிழ் தினசரி பத்திரிகையில் இணைந்து கொண்டார். 35 வருடங்களுக்கு மேலாக அவர் அந்தப் பத்திரிகையின் பிரதான ஆசிரியராகப் பணியாற்றி உள்ளார். உள்நாட்டு மோதல்கள் மற்றும் யாழ்ப்பாணம் முழுமையாக விடுதலைப் புலிகளின் கடடுப்பாட்டில் இருந்த காலம் என பல நெருக்கடியான காலகட்டங்கள் இதில் அடங்கும்.
எவ்வாறாயினும் அவர் தனது கடமைகளில் நடுநிலை தவறாத ஒருவராகவே இருந்தார். அவரது உயிருக்கு பல சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல்கள் இருந்தன. ஒரு முறை அவர் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மிக மோசான முறையில் ஒரு வாகனத்தால் மோதப்பட்டார். அந்தச் சம்பவத்தில் அவர் பலத்த காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.
உதயன் அலுவலகம் மீதும் பல தடவைகள் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. இந்த குண்டு சம்பவங்களின் பின்னரும் நான் பல தடவை அவரை துபாய்க்கு அழைத்துக் கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவை எதுவும் பலன் அளிக்கவில்லை. பிறகு சுமார் 30 வருடங்களின் பின் அவர் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் வெள்ளவத்தையில் மருத்துவ சிகிச்சைகளின் நிமித்தம் தங்கி வசிப்பதாகக் கூறினார்.
இக்கட்டான கால கட்டங்களில் திறம்பட பணியாற்றிமைக்காக பல சர்வதேச விருதுகளையும் வென்ற ஒரு ஊடகவியலாளரே கானமயில்தான்.
நான் உடனே சென்று அவரை சந்தித்தேன். பிறகு உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து யாழ்ப்பாணம் செல்வதற்கான சந்தர்ப்பங்கள் மீண்டும் வாய்த்த பின் நான் அங்கு சென்று உதயன் அலுவலகத்தில் அவரை சந்தித்தேன். அவர் 36 வருடங்கள் உதயனில் பணியாற்றிய பின் ஓய்வு பெற்றார். பிறகு மூன்று வருடங்களுக்கு முன் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று அவரை சந்தித்தேன். அப்போது அவர் நோய்வாய்ப்பட்டுள்ளதைக் கண்டு மிகவும் கவலை அடைந்தேன். அந்த சந்திப்பு எனக்குள் பெரும் கவலையை தந்தது. இதுதான் நான் அவரை சந்திக்கும் கடைசி சந்தர்ப்பமா என்ற கேள்வியும் என் உள் மனதில் எழுந்தது.
கடந்த வாரம் முழுவதும் நன்பர் கானமைல்நாதன் அடிக்கடி எனது நினைவில் வந்தார். அவரோடு ஒரு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவோம் என்று நான் எண்ணிய போது எதிர்பாhத விதாக அவரது மரணச் செய்தி எனக்கு கிட்டியது.
இந்த நாட்டில் ஊடகத்துறை என்பது வெறுமனே ஒரு பொதுமக்கள் தொடர்பு பணியாக மாறி உள்ள நிலையிலும் கானமைல்நாதன் இளைய தலைமுறை ஊடகவியலாளர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாகவே இன்றும் திகழுகன்றார்.
Post a Comment