ஜனாஸாக்களை ஓட்டமாவடிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள் - பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம்
கொரோனா நீரினால் பரவுவதில்லை என்பது விஞ்ஞானப்பூர்வமானது.ஆகையால் ஜனாஸாக்களை ஓட்டமாவடிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின்போது செவ்வாய் கிழமை (16) பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில்அவர் மேலும் கூறியதாவது,
தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த நிகதியமைச்சருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு ,எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனது விமர்சனங்களை முன்வைக்கின்றேன்.
இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள் இன்றைய எல்லா தேசிய பத்திரிகைகளிலும் எழுபதுக்கும் மேற்பட்ட பொலிஸ் நிலையங்களிலிருந்து ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு கோரி நீதிமன்றங்களுக்குச் சென்றதாக செய்தி வெளியாகியுள்ளது.
தொற்று நோயை காரணம் காட்டி முன்னர் ஆர்ப்பாட்டஞ் செய்தவர்களை கைது செய்து தடுத்துவைத்தும் தனிமைப்படுத்தியும் கண்ட பலன் என்ன? நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதுதான் மிச்சம் அனேகமான நீதிமன்றங்கள் தடையுத்தரவு வழங்கமறுத்திருக்கும் போது சந்தி சந்தி தோறும் போலீசாரை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்திற்கு வருவோரை தடுத்து நிறுத்த முயற்சி செய்யப்படுகின்றது ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறீர்கள்.
சரியான நிதி முகாமைத்துவம் இன்மையால் நிலைமை மோசமாகியுள்ளது உங்களது அரசாங்கம் வெற் வரியை 15 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைத்ததன் விளைவாக பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
விஞ்ஞானபூர்வமற்ற இன்னொரு நடைமுறைதான் அரசாங்கம் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு மேற்கொண்ட தீர்மானம். நீரினால் கொரோனா பரவு கின்ற தீர்மானம் முற்றிலும் விஞ்ஞானபூர்வ மற்றது . இங்கிருக்கும் டாக்டர் ரொமேஷ் பத்திரண போன்ற அமைச்சர்களுக்கும் அது பற்றி தெரியும் .
அவ்வாறு தெரிந்திருந்தும் கூட இன்னமும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை இரண்டு நாட்கள் கழித்து ஓட்டமாவடிக்கு அடக்கஞ் செய்வதற்கு அனுப்புகின்றனர்.
இனியாவது அவ்வாறு செய்வதை நிறுத்துங்கள் அது பிரதமர் கூட ஏற்றுக் கொண்ட விஷயம். ஏன் செய்ய முடியாது முன்னர் அவ்வாறான ஜனாஸாக்களை மாலைதீவுக்கு அனுப்பி அங்கு அடக்கம் செய்வதற்கு இந்த அரசாங்கம் எத்தனித்தது.
நாங்கள் அரசாங்கத்தை விமர்சிக்கும் போது வலிக்கத்தான் செய்யும்.ஆனாலும் நாங்கள் விமர்சிக்த்தான் வேண்டும்.
மற்றது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அதாவது ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்ததாகும் இனங்களுக்கிடையில் குரோதத்தையும் ,வெறுப்பையும் ஏற்படுத்தி வருகின்ற மதகுருவொருவரை அதற்குத் தலைவராக நியமித்ததாகும் அப்படியானவர்களால் நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமா?
சிறுபான்மை மக்களை தூரப்படுத்தும் செயற்பாடுகளை கைவிடுங்கள்.
வேலைவாப்பின்மை ,வறுமையும் அதிகரித்து வருகின்றன. நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படுகின்றது வெளிநாட்டுச் செலாவணிக்காகத் திண்டாடுகின்றனர்.
சேதனப்பசளை விஷயத்தில் எழுத்த தீர்மானத்தின் விளைவுகளை பெரும்போக பயிர்ச்செய்கையின் பின்னர் நாடு காணப் போகின்றது. வறுமை மேலும் தாண்டவமாட போகின்றது .
வரவு செலவு திட்டத்தில் ,விபத்திற்கு உள்ளாகும் வாகனத்திற்காக கட்டணம் அறவிடப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .அது ஒரு நகைச்சுவையாகும் .
வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்க முன்னர் நிதியமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் அதுபற்றி கேட்டபோது “மக்களுக்கு கொடுப்பதற்கு இல்லை ; எடுப்பதற்குத்தான் இருக்கின்றது என்று கூறியுள்ளார்.
இறுதியில் வேறு வழியில்லாமல் சர்வதேச நாணய நிதியிடம் தான் தஞ்சமடைந்தாக வேண்டும் அங்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு நிதியுதவி பெறுவதுதான் ஒரேயொரு வழியாகும் .
சுத்திகரிக்கப்படாத மசகு எண்ணெய்யை கொள்வனவுசெய்யயுள்ளதாக சம்பந்தப்பட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார். இங்கு எண்ணெயை சுத்திகரிப்பதை நிறுத்திவிட்டு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு தேவையான வெளிநாட்டுச் செலாவணிக்கு எங்கே போவது?என்றார்.
"இருளில் மூழ்கப் போகும் இலங்கை"
ReplyDeleteஇலங்கை அடுத்த மாதம் முதல் இருளில் மூழ்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி இலங்கைக்கு எரிபொருள் கப்பல் ஒன்று வரவுள்ளதாக உறுதியளித்த போதிலும், அதற்கு செலுத்துவதற்கு போதிய டொலர்கள் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பழுது நடவடிக்கை காரணமாக சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்படவில்லை. கச்சா எண்ணெய்க்கு செலுத்த வேண்டிய டொலர்கள் இல்லாத காரணத்தினால் தான் மூடப்பட்டுள்ளது.
சப்புகஸ்கந்த மூடப்பட்டுள்ள நிலையில், விமான நிலையத்திற்கான எரிபொருள் நிறுத்தப்பட்டு ஸ்ரீலங்கன் விமான சேவையும் நிறுத்தப்படும்.
மேலும் டிசம்பர் மாதம் இறுதியில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தீர்ந்துவிடும். அன்றிலிருந்து நாட்டு மக்கள் இருளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இந்தக் கருத்துகள் பற்றி இந்த நாடடு மக்கள் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டிய காலம் இது.