Header Ads



பலஸ்தீனுக்காக பாராளுமன்றில் குரல்கொடுத்தார் ஹரீஸ்


பலஸ்தீன் என்பது உலக வரலாற்றில் தனிநாடாக  குறிப்பாக இஸ்லாமியர்களின் தலைமையாக இருந்த ஒட்டோமன் ஆட்சியில் துருக்கிய இராச்சியத்தில் இருந்த நாடு. இது முதலாவது உலகமகா யுத்தம் நடைபெற்ற 1914- 1918 களுக்கு பின் மேற்குலக நாடுகள் பலஸ்தீனத்திற்கு எதிராகவும், அங்கு வாழும் முஸ்லிங்களுக்கு எதிராகவும் பல காய் நகர்த்தல்களை செய்து அந்த நாட்டில் இஸ்ரேலியர்களை குடியேற்றுகின்ற முயற்சியை ஆரம்பித்து இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பு பலாத்காரமாக பலஸ்தீனை துண்டாடி அங்கு இஸ்ரேலியர்களை தனிநாடாக்கி சொந்த பூர்விக குடிமக்களான பலஸ்தீனர்களை நாடற்றர்வர்களாக மாற்றி அகதிகளாக்கினர். இந்த செயற்பாட்டை மனிதகுலம் மன்னிக்க மாட்டாது. என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தற்போது அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடு பலஸ்தீனத்தில் இரண்டு ஆட்சி முறைமைகள் இருக்கிறது. ஒன்று அப்பாஸின் ஆட்சி முறை மற்றையது காஸா பள்ளத்தாக்கு பிராந்தியத்தில் ஹமாஸ் அமைப்பினுடைய ஆட்சிமுறை. அமெரிக்கா நிகழ்ச்சி நிரலுக்கு ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக மாற்றி அந்த பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு பெரியளவிலான நெருக்கடிகளையும், உணவு தட்டுப்பாட்டையும் ஏற்படுத்த ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளார்கள். கத்தார் சட்டபூர்வ அரசு ஒவ்வொரு வருடமும் ஹமாஸ் அமைப்பினுடைய ஆட்சிமுறை உள்ள காஸா பள்ளத்தாக்கு பிராந்திய மக்களுக்கான உணவு, நீர், மின்சாரம், இல்லிடம் போன்ற முக்கிய தேவைகளுக்காக நிறைய நிதி உதவிகளை செய்து வந்தது. ஆனால் இந்த தடையினால் அங்கு மிகப்பெரிய உணவுப்பஞ்சம் ஏற்படப்போகிறது. அந்த மக்கள் பட்டினியினால் மரணிக்கும் நிலை ஏற்படும். இந்த இஸ்ரேல் எனும் நாடு பலஸ்தீன அப்பாவி மக்களுக்கு மிகப்பெரும் அநியாயத்தை செய்து கொண்டிருக்கிறது.

சூடான் ஒரு பெரும் முஸ்லிம் நாடக இருந்தபோது அதிலிருந்து தென்சூடானை பிரித்த அமெரிக்கா இப்போது அகதி வாழ்க்கை வாழும் காஸா பள்ளத்தாக்கு பிராந்திய மக்களுக்கு உணவு பற்றாக்குறையை உண்டாக்க பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளார்கள். இதனை நாங்கள் மன்னிக்க முடியாது. எமது நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் எப்போதும் பலஸ்தீன மக்களுக்கு சார்பாக செயற்படுவதை நன்றியுடன் நினைவு படுத்துகிறேன் என்றார்.

நூருல் ஹுதா உமர்


No comments

Powered by Blogger.