கனடாவில் சுமந்திரன், சாணக்கியனுக்கு எதிர்ப்பு - பொலிஸாரின் பாதுகாப்புடன் மண்டபத்திலிருந்து வெளியேற்றம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோர் கனடாவில் நடத்திய கூட்டத்தில், பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இதனால், கூட்டம் இடைநடுவிலேயே நிறுத்தப்பட்டது. மண்டபத்துக்குள் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, அம்மண்டபத்துக்கு வெளியே ஒரு குழுவினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அங்கு குழப்பமான சூழல் ஏற்பட்டது. இறுதியில் கனடிய பொலிஸார் அழைக்கப்பட்டனர். அவர்கள் வந்தும் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டதுடன், பொலிஸாரின் பாதுகாப்புடன் சுமந்திரன், சாணக்கியன் அவ்விருவரும் மண்டபத்திலிருந்து வெளியேறி சென்றனர்.
இன வெறியர்களின் இந்த போக்கிரி,அடாவடித்தனம், பா.உ களான திரு சாணக்கியனும், திரு சுமந்திரன் அவர்களும் ஒரு குறித்த தௌிவான சவால்மிக்க ஒரு இலக்கை நோக்கிச் முன்னே செல்கின்றனர் என்பதைத் தௌிவாக உணர்த்துகின்றது. மேலும் இந்த இனவெறியர்களின் நடத்தை அந்த இருவரினதும் மதிப்பையும் அந்தஸ்த்தையும் உலக மட்டத்தில் உயர்த்தும் என்பதும் மறைமுகமான உண்மை.
ReplyDelete