Header Ads



எங்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உண்டு - ஜனாதிபதி எச்சரிக்கை


உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களது சிவில் உரிமைகள் ரத்து செய்யப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

புதிய களனி பாலத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் விசேட சட்டமொன்றை கொண்டு வந்து தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களது சிவில் உரிமைகள் ரத்து செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான குற்றச் செயல்கள் மீளவும் இடம்பெறாதிருக்க வேண்டுமாயின் அவ்வாறான தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடாத்திய ஜனாதிபதி ஆணைக்குழு நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஒட்டுமொத்த அமைச்சரவையும் இதற்கு பொறுப்பு என கூறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உண்டு எனவும், தேவை ஏற்பட்டால் புதிய சட்டமொன்றை கொண்டு வந்து தொடர்புடையவர்களின் சிவில் உரிமைகளை ரத்து செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் எங்களிடம் கோரிக்கைகளை முன்வைக்கும் போது நிதானமாக முன்வைக்க வேண்டும் எனவும், சிவில் உரிமை பறிக்கப்பட வேண்டுமாயின் அதை செய்யத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.