சமிந்த விஜேசிறி பாராளுமன்றத்தில் ஆற்றிய சுவாரசியமான உரை - அவர் தயாரிக்கவுள்ள படத்தில் யார் நடிக்கவுள்ளார்கள் தெரியுமா..?
”ஜீஆருடன் முடியாது” (ஜீஆர் எக்க பே) என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், இனவாத அரசியலின் ஆரம்பமாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரின் செயற்பாட்டை இன்று நாடாளுமன்றத்தில் பார்த்ததாக குறிப்பிட்டார்.
இதன்போது நாட்டை, மதத்தை இனத்தைக் காப்பதாக கூறி சத்தமிட்ட ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடிப்பையும் தாம் பாா்த்ததாக தெரிவித்தார்.
இந்தநிலையில், இனவாதத்தை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதை வெளிக்கொணரும் வகையில் திரைப்படம் ஒன்றை தயாரிக்க தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த திரைப்படத்தில் பயங்கரவாத குழுவுக்கு பணம் கொடுத்து தாக்குதலை நடத்த ஊக்குவிக்கும் குழுவின் ”பாத்திரங்கள்” உள்ளன.
அதற்கு அரசாங்க கட்சியின் உறுப்பினர்களை இந்த திரைப்படத்தில் சேர்த்துக்கொள்ளப்போவதாக சமிந்த விஜேயசிறி குறிப்பிட்டார்.
புத்தர் சிலை உடைப்பது, அதன் மூலம் இனத்துவேசத்தை ஏற்படுத்துவது போன்ற பாத்திரத்தை ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு வழங்கமுடியும். அவரே இதற்கு பொருத்தமானவர் என்று அவர் தெரிவித்தார்.
அத்துடன் கொத்து தயாரிக்கும் பாத்திரத்தை, நேற்று நாடாளுமன்றத்தில் சத்தமிட்டவருக்கு( திஸ்ஸ குட்டியராச்சி) கொடுக்க முடியாது.
அவர், அதற்கும் பொருத்தமானவா் அல்லர்.
எனவே அவரை விடுத்து ”டக்கர டக்கர” என்ற சத்தத்துடன் கொத்து தயாரிக்கும் பாத்திரத்தை அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு வழங்கமுடியும்.
அவா் கொத்து தயாரிக்கும் போது, ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து, ”இந்த கொத்தை சாப்பிடவேண்டாம்”. ”இது இனத்துக்கு மதத்துக்கு அழிவைக்கொண்டு வரும்” என்று கூறும் பாத்திரங்களும் தமது திரைப்படத்தில் இடம்பெறவுவுள்ளன.
இதன்போது சிங்கள மக்கள் மத்தியில் இனம் மதம் தொடர்பான உணர்வு பீரிடும் வகையில் இந்தக்காட்சிகள் அமையவேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாக விஜெசிறி குறிப்பிட்டார்.
திரைப்படத்தில் சத்திரசிகிச்சை வைத்தியர் வேடத்துக்கு மருத்துவ அறிவைக் கொண்ட அமைச்சர் விமல் வீரவன்ச பொருத்தமானவராக இருப்பார்.
அடுத்ததாக சஹ்ரானின் பாத்திரத்துக்கு அமைச்சர் அலி சாப்ரி பொருத்தமானவராக இருப்பார்.
இதற்கு அப்பால் நடிகர்களை தயார்ப்படுத்தி, முழுமையாக இந்த விடயத்தை அரங்கேற்றுவதற்கு மூலக்காரணமாக இருப்பவாின் பாத்திரத்துக்கு ஒருவரை பாிந்துரைக்கமுடியும்.
அவரே நிதியைமைச்சர் பசில் ராஜபக்ச,
அவரே அதற்கு பொருத்தமானவராக இருப்பார்.
எதுவும் நடந்தால் கூட உடனடியாக நாட்டை விட்டுச் செல்லக்கூடியவர் அவரே என்றும் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டார். .
இந்த திரைப்படத்துக்கு “ஜீஆர் எக்க பே”( ஜீஆருடன் முடியாது) என்று பெயரிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
”ஜீஆருடன் முடியாது” என்று கூறும்போது அது உணா்ச்சிகளை ஏற்படுத்தும் என்பதற்காகவே அந்த பெயரை தொிவு செய்ததாக சமிந்த விஜயசிறி தெரிவித்தார்.
தாம் எண்ணிக்கொண்டுள்ள இந்த திரைப்படத்தின் முடிவு விரைவில் கிடைக்கும் என்று தாம் எதிர்பாா்ப்பதாக குறிப்பிட்ட அவர், இது வரலாற்று திரைப்படமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மனிதா்களை கொன்று அதிகாரத்தை கைப்பற்றுவது கொடுமையான செயல் என்பதையே இந்த திரைப்படம் வெளிப்படுத்தும் என்று சமிந்த விஜேயசிறி குறிப்பிட்டார்.
இதேவேளை அவர் இந்த கருத்துக்களை வெளியிட்ட பின்னர், கருத்து வெளியிட்ட அமைச்சர் செஹான் சேனசிங்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடின்மையே காரணம் என்று குற்றம் சுமத்தினார்.
எனினும், தமது கதையை, அமைச்சர் சேனசிங்க திரிபுப்படுத்துவதாக தெரிவித்த, சமிந்த விஜேசிறி, இந்த திரைப்படத்துக்கு அமை்ச்சர் கூறும் கதாபாத்திரத்துக்காக ஆளும் கட்சியுடன் இணைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவையும் தாம் பாிந்துரைப்பதாக குறிப்பிட்டார். TW
Post a Comment