Header Ads



மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக மத்திய மாகாண கல்வித் திணைக்களத்துடன் கைகோர்த்த ஸம் ஸம் பவுண்டேஷன்


மத்திய மாகாணப்  பாடசாலைகளில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் கல்வி பயிலும் சுமார் 10000 மாணவர்களின் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மேம்மடுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை மத்திய மாகாண கல்வித் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. 

ELAP (Emergency Learning Assistance programme) எனும் இத் திட்டத்தின் முதலாவது கட்டமாக 21 நிலையங்களில்  1050 மாணவர்களுக்குபரிட்சையில் சித்தியடைய  விஷேட பயிற்சி வழங்கும் இந்த திட்டத்திற்கு ஸம் ஸம் நிறுவனம் அனுசரணை வழங்குகிறது. 

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 25 ஆம் திகதி வியாழக்கிழமை மத்திய மாகாணக் கல்வித் திணைக்களத்தில்  கைச்சாத்திடப்பட்டது. 

இந் நிகழ்வில் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் திரு. அமரசிறி பியதாச,மேலதிக கல்விப் பணிப்பாளர்கள், ஸம் ஸம் நிறுவனத்தின் தலைவர் முப்தி.யூசுப்  ஹனிபா மற்றும் ஸம் ஸம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள்  கலந்துகொண்டனர்.



No comments

Powered by Blogger.