Header Ads



எண்ணெய் பிரச்சினைக்கு தீர்வை பெற, அரபு நாடுகளுடன் கலந்துரையாட வேண்டும்


நாட்டில் ஏற்பட்டுள்ள மசகு எண்ணெய் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள அரபு நாடுகளுடன் ராஜதந்திர ரீதியில் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் என ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2022 வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்று மசகு எண்ணெய் கொண்டு வருவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதேபோன்றதொரு பிரச்சினை 2011இல் ஏற்பட்டது. நாங்கள் கடந்த 20 வருடங்களாக ஈரானில் இருந்தே எரிபொருள் பெற்றுவருகிறோம். அப்போது அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக ஈரானிலிருந்து எரிபொருள் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது.

அபோது நான் ஈரான் தூதுவரை அழைத்து இது தொடர்பாக கலந்துரையாடி, வங்கியில் நாணய கடிதம் ஆரம்பிக்காமல் நம்பிக்கையின் அடிப்படையில் எண்ணெய் கப்பல்களை கொண்டு வந்தோம்.

இன்னும் அந்த கடனை நாங்கள் செலுத்தவில்லை. 280 டொலர் மில்லியன் வழங்கவேண்டியுள்ளது. அதனால் எண்ணெய் இல்லை என நாங்கள் ஒருபோதும் சுத்திகரிப்பு நிலையத்தை மூடிவிடவில்லை. அதனால் எமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள ராஜதந்திர உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார். 

மெட்ரோ நியுஸ்

1 comment:

  1. இவர் இதற்கு முன் எங்க இருந்து வந்த (முஸ்லிம்களின் ஜனாஸா எரியும் போது )

    ReplyDelete

Powered by Blogger.