Header Ads



"பலஸ்தீனை இஸ்ரவேலரிடமிருந்து விடுவித்து அந்நாட்டினை சுதந்திரமாக வாழ விடு"


- அஷ்ரப் ஏ சமத் -

சர்வதேச பலஸ்தீன நட்புரவு  தினம் நவம்பர் 29 தினத்தினை முன்னிட்டு   நாடு முழுவதிலும்  பலஸ்தீனம் நாட்டினை இஸ்ரவேலரிடமிருந்து  விடுவித்து அந்த நாட்டினை சுதந்திரமாக வாழ விடு எனும் தலைப்பில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைமையகமான  நாரேகேன்பிட்டியில்  விசேட விரிவுரைநடைபெற்றது.  கொழும்பு பல்கலைக்கழகத்தின் பி.எச்.டி  இறுதி மாணவன் சர்வதேச நாடுகளின் உறவுகள் ஆராய்ச்சித்துறை கசும் விிஜயதிலக்க  உரையாற்றினாா்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பிணா் இம்தியாஸ் பாக்கீா் மாக்காா்,  பலஸ்தீன நாட்டின் துாதுவா் கலாநிதி சுகையிா் எம். எச். சயிட்  அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவா்களான எம்.எம். அமீன்,  எம். லுக்மான் ஆகியோறும் கலந்து கொண்டனா். இந் நிகழ்வு  ஞாயிற்றுக்கிமை 29 நடைபெற்றது. 

  1977 ஜக்கிய நாடுகள் அமைப்பின் மாநாட்டில் பலஸ்தீனத்தினை அங்கிகரித்து சர்வதேச பலஸ்தீன் நட்புரவு தினத்தினை 29. நவம்பா்  அங்கிகரித்து தீா்மாணம் வெளியிட்டது. அந்த நாட்டு மக்களையும் அவா்களது நாட்டினையும் இஸ்ரேல் விடுவித்து யுத்தத்தினையும் நிறுத்தும்படியும் தெரிவித்தது.  இங்கு உரையாற்றிய  பலஸ்தீன் நாட்டின் துாதுவா் உரையாற்றுகையில் இலங்கை கடந்த 3 தசாப்தங்களாக பலஸ்தீன் நாட்டுக்குதொடாநது ஆதரவு தெரிவித்து வருகின்றது.  அத்துடன் இலங்கையில் வாழும் சகல இன மக்கள் பல்வெறு அரசியல்  கட்சிகளும்  அரசாங்கமும் ஆதரவு தெரிவித்து அவா்களது நாட்டில் பல நிகழ்வுகளை தெரிவித்து வருவதையிட்டு பலஸ்தீன் நாட்டு மக்கள் சாா்பாக நன்றியைத் தெரிவிப்பதாக தெரிவித்தார்

1 comment:

Powered by Blogger.