ஈஸ்டர் தாக்குதல் பற்றி இப்போது எதுவும் தெரியாதது போல் இருக்கிறார்கள், அதுதான் எம்மால் தாங்க முடியாத விடயம்
நாடகத்தில் நடிக்கும் நடிகர்களைப் போன்று கிரீடத்தை அணிந்து கொண்டு செயற்படாது மக்களின் துயரங் களுக்காகக் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் அதனைச் செய்ய முடியாவிட்டால் அதனைக் கழற்றிவிட்டு வெளியேற வேண்டும் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வாதுவை யிலிருந்து தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இந்தத் தாக்குதலின் வெளிப்புற தோற்றத்தில் காண்பதை விட அதன் உட்புற தோற்றத்தில் அதிக வேலைப்பாடு இருப்பதாக நாங்கள் தற்போது உணர்ந்து வருகிறோம்.
நாம் யாரையும் பழிவாங்க விரும்பவில்லை. ஆனால் உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தத் தாக்குதலை அறிந்த உயர் பதவியில் இருப்போர் மற்றும் வாக் குறுதிகளை வழங்கியோர் இப்போது எதுவும் தெரியாதது போல் இருக்கிறார்கள் என்றும் அதுதான் எம்மால் தாங்க முடியாத விடயம் என்றும் இதற்கு அவர்களின் பங்கு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை அனைத்து கத்தோலிக்கர்களும் ஒன்றிணைந்து நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித் துள்ளார். TL
Post a Comment