Header Ads



வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், கூடுமான அளவில் டொலர்களை தாய் நாட்டுக்கு அனுப்ப வேண்டும்


நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் டொலர் தட்டுப்பாட்டு பிரச்சினையில் இருந்து மீள, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தம்மால் முடிந்தளவில் டொலர்களை தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்காக தேவைப்படும் டொலருக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தவறான அந்நிய செலாவணி முகாமைத்துவம் காரணமாக டொலர் கையிருப்பு குறைந்துள்ளது.  கொரோனா தொற்று நோய் காரணமாக வெளிநாட்டு நிதி மூலங்கள் குறைந்ததால், நிலைமை பாரதூரமாக மாறியுள்ளது.

டொலர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக இலங்கை டொலர்களை அச்சிட முடியாது. இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கூடுமான அளவில் டொலர்களை தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.

நாட்டில் டொலர் கையிருப்பு குறைந்தால், வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் சான்று உறுதிப்பத்திரங்கள் எதனையும் வெளியிட முடியாத நிலைமை ஏற்படும்.

இந்த நிலைமையால், எதிர்வரும் காலங்களில் அரிசி, பால் மா, சீனி மாத்திரமல்ல எரிபொருளையும் இறக்குமதி செய்ய முடியாது போனால், முழு நாடும் ஸ்தம்பித்து போய்விடும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். 

2 comments:

  1. Central bank given low level Dollar rates so how we can send money to Sri lanka also this is God punishtments for goverments.

    ReplyDelete
  2. உங்களுடைய அரசின் பாரிய திருட்டில் வெளிநாட்டில் வேலை செய்யும் நம்மையும் இணைத்து கொள்வதற்கா.

    ReplyDelete

Powered by Blogger.