Header Ads



உகாண்டாவின் நிலை இலங்கைக்கு ஏற்படும் - பொன்சேகா எச்சரிக்கை


உகாண்டாவை போலவே சீனாவின் கடன் இலங்கையை விழுங்கிக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

சீனாவிடமிருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமையால் உகாண்டாவிலுள்ள ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்தையும் சீனா கையகப்படுத்தியதாக ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

தேசிய திட்டமிடலொன்று இல்லாமல் சீனாவிடமிருந்து பாரியளவில் கடன் வாங்கும் ஊழலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் முறையற்ற முடிவு இதுவென்பதே சரத் பொன்சேகாவின் நிலைப்பாடாகும்.

2 comments:

  1. Good
    சீன அடிமை நாடுகளான இலங்கை, பாக்கிஸ்தான் இரண்டுக்கும் வெகுவிரைவில் இதே நிலமைதான்

    ReplyDelete
  2. சட்டம்,நீதி,நியாயம் பேச நீங்கள் தகுதியானவரா என்பதை முதலில் நீங்களே சிந்தியுங்கள். பொதுமக்களின் வாக்குகளால் பதவிக்கு வந்த நீங்கள், பொதுமக்கள் சேவைகளை மேற்கொள்ள அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சுங்கத் தீர்வையற்ற வாகனத்தை இரண்டு கோடிக்கு மேலாக விற்று பொதுமக்களின் பணத்தை விழுங்கிவிட்டு பொதுமக்கள் சொத்தை அடுத்தவர்கள் விழுங்குவதாகக் முறைப்பாடு செய்ய உங்களுக்கு என்ன தகுதியிருக்கின்றது. ஊத் ஹொரா, மூத் ஹோரா, அவ்வளவுதான். ஒருகள்ளன் மற்றொரு கள்ளன் பற்றி முறைப்படுகின்றான்.

    ReplyDelete

Powered by Blogger.