வளர்ச்சிப் பாதையில் வத்தளை, ஸாஹிரா மகா வித்தியாலயம்
அது மட்டுமல்லாது க.பொ.த சா கூத பரீட்சையில் (2020) தோற்றிய மாணவர்களுள் 84ஸ சதவீதமானோர் உயர்தரத் தகுதியைப் பெற்றுள்ளனர். புலமைப் பரிசில் பரீட்சைக்கு (2020) தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்திப புள்ளியான 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கல்வித் துறையில் மட்டுமல்லாது இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் மாணவர்கள் திறமை காட்டும் ஒரு பாடசாலையாக பாடசாலை ஸாஹிரா மகா வித்தியாலயம் விளங்குகின்றது.
கடந்த கொவிட் நிலைமையிலும் கூட அதிபர் ஆ.ஆ.ஆ. இர்ஷாட் அவர்களின் முறையான திட்டமிடலினூடாக பிரதி அதிபர் ளு.ஊ. பௌசுதீன் அவர்களது வழிகாட்டலிலும் ஆசிரியர்களின் அயராத முயற்சியுமே இப்பெறுபேற்றுக்கு முக்கிய காரணியாக அமைந்நது.
இவ்வருடம் 'தகவல் தொழினுட்ப முகாமைத்துவக் கற்கை நெறி' க்கு பல்கலைகழகத்துக்குத் தெரிவாகிய மாணவி சாஹிரா கருத்துத் தெரிவிக்கையில் 'எனது இந்தப் பெறுபேற்றுக்கு அதிபரினதும் ஆசிரியர்களினதும் அயராத உழைப்பும் மாணவர்கள் மீது அவர்கள் கொண்ட அக்கறையுமே காரணமாகும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பிரிவுக்குப் பொறுப்பான வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்ஹ் ஆ.வு.ஆ. தௌசீர் அவர்கள் குறிப்பிடுகையில் 'பாடசாலை ஸாஹிரா மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆசிரியர்களின் தியாக மனப்பான்மையும் , கடும் முயற்சியுமே பாடசாலையின் முன்னேற்றத்துக்கு சான்றாக அமைந்துள்ளது. மாணவர்கள் சிறந்த ஒழுக்க நெறியுடன் வழி நடாத்தப்படுகிறார்கள். தோடர்ந்து இப்பாடசாலை வளர்ச்சி காண வாழ்த்துகிறேன்' எனக் குறிப்பிட்டார்.வளர்ச்சி காணும் வத்தளை பாடசாலை ஸாஹிரா மகா வித்தியாலயம் மேலும் வளர்ந்து உச்சத்தை அடைய நாமும் வாழ்த்துவோம்.
Post a Comment